பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 03

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

❆❆ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; பல ஹதீஸ்களில் பெற்றோருக்கு பணிவிடை செய்து நல்ல முறையில் அவர்களுடன் நடந்து கொள்ளுமாறு உற்சாகப்படுத்தியுள்ளார்கள். அதே போன்று பெற்றோரை துன்புறுத்துவது, நோவினைகளைச் செய்வது, அவர்களுக்கு ஏசுவது; இவைகளுக்கு எதிராக கடினமான எச்சரிக்கைகளைச் செய்துள்ளார்கள்.

❆❆ செயல்களிலே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது; அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது; அதன் பின்னர்தான் ஜிஹாத் செய்வது ஆகும்.

❆❆ செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.

❆❆ மனிதர்களிலே நல்ல முறையில் உறவாட வேண்டிய நபர் எம்முடைய தாய்; மீண்டும் எம்முடைய தாய்; மீண்டும் எம்முடைய தாய்; அதன் பிறகு எம்முடைய தகப்பன். பிறகு எம்முடைய நெறுங்கிய உற்றார் உறவினர்கள்.

❆❆ பெற்றோருக்கு நாம் நன்றி செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளை. அவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வது; ஹராம்! ஹராம்! பெற்றோர்களைப் புறக்கணித்து நோவினை செய்வது; அவர்களை துன்புறுத்துவது; மேலும் அவர்களுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது; ஹராம்! ஹராம்!

❆❆ பெற்றோர் காபிர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நல்லுபகாரம் செய்யுங்கள். அல்லாஹ்வுக்கு மாற்றமான விடயங்களில் அவர்களுக்கு வழிப்பட வேண்டாம்.

❆❆ இஸ்லாம் மார்க்கத்தில்தான் பெற்றோருக்குரிய உரிமை பூரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது வேறு எந்த மார்க்கத்திலும், வேறு எந்த வழிமுறைகளிலும் கொடுக்கப்படவில்லை.

❆❆ உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் சொர்க்கம் நுழைய முடியாது. உறவுகளில் பிரதானமானது பெற்றோரின் உறவாகும்.

❆❆ பெற்றோரை துன்புறுத்தி நோவினை செய்வது, புறக்கணிப்பது; பெரும் பாவங்களில் நின்றும் உள்ளதாகும்.

❆❆ பெற்றோரை எவரெல்லாம் சபிக்கின்றார்களோ! அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்.

❆❆ ஒரு பிள்ளை தனது பெற்றோருக்கு ஒரு போதும் பிரதியுபகாரம் செய்ய முடியாது; தனது பெற்றோர் அடிமைகளாக இருக்கின்ற நிலையில் அவர்களை அவன் விடுதலை செய்தாலே தவிர.

கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)