بسم الله الرحمن الرحيم
அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி
தாழ்மையான நிலையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்! எந்த ஒரு வஸ்துவையும் விரும்பாத அளவு; அல்லாஹ்வை விரும்பி அவனுக்கு நன்றி செலுத்துவோம்! மேலும் அல்லாஹ் வெறுத்த விடயங்களில்; அவன் வழங்கிய அருட்கொடைகளை பயன்படுத்தாமல் இருப்போம்! மேலும் எங்களுடைய உள்ளத்தில் எந்த நேரமும் எங்களைப் பற்றிய விருப்பத்தைவிட; அல்லாஹ்வைப் பற்றிய, அவனது மார்க்கத்தைப் பற்றிய, அவனது தூதரைப் பற்றிய விருப்பங்களை நிறைத்து வைப்போம்!
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வார்த்தைகளில் இருந்து..
✽✽ இஸ்லாம் மார்க்கத்தை ஒரு அருட்கொடையாக அல்லாஹ்தான் தந்தான்.
✽✽ அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டிட முடியாது.
✽✽ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்ன?
✽✽ எவ்வாறு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்?
✽✽ உங்களையும் உங்கள் வீடுகளையும் உயிர்ப்பித்துக் கொள்ளுங்கள்.
✽✽ மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
✽✽ தொழுகை நிலை நாட்டப்பட வேண்டும்.
✽✽ இந்த மார்க்கத்தை எங்களுடைய மார்புகளில் சுமந்து; எங்களின் உயிர்களை விட பேணிப் பாதுகாக்க வேண்டும்.
✽✽ எங்களுடை அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி (றழியல்லாஹு அன்ஹும்) மற்றும் ஸலபுகள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
✽✽ நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களை தெளிவான ஒரு பாதையிலே விட்டுவிட்டுச் சென்றார்கள்.
✽✽ அல்லாஹ்வின் நினைவுகளை எங்களுடைய உள்ளங்களில் உணர்வூட்டி; மேலும் அதனை உள்ளங்களில் சுமந்து, நிறைத்துக் கொண்டு; செயல்களில் வெளிக்கொணர வேண்டும்.
✽✽ உங்களில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. ஒரு பேரீத்தின் பலத்தின் பாதியை கொடுத்தாவது நரக நெருப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
✽✽ அல்லாஹ்தான் ஒரு சாராரின் உள்ளங்களில் அருட்கொடைகளைப் போட்டான்.
✽✽ எந்த விடயத்தில் ஒரு மனிதன் மரணிக்கின்றானோ! அதிலேதான் அவன் எழுப்பப்படுவான்.
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் அருட்கொடைகள் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.