بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
யார் இந்த மார்க்கத்தில் மரணம் வரும் வரைக்கும் உறுதியாக இருந்து அல்லாஹ்வை சந்திக்கப் போகிறார்?
சஹ்ல் பின் சஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்; இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. (புகாரி, முஸ்லிம்)
وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது. (ஸூரத்து ஹூது: 120)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை ஆதாரங்களுடன் கற்று; அவைகளை அமுல்படுத்துவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.