மார்க்க அறிவை அமுல் படுத்துவதில் ஸலபுகளின் மிக மகத்தான பாதையில் செல்வதற்குறிய சரியான வழிமுறை என்ன?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

எண்ணத்தை (நிய்யத்தை) சீர் திருத்துவதும், (தங்ககளுடைய) ஆத்மாவைப் பற்றி  கணக்கிட்டுப் பார்ப்பதும் சரியான வழி முறையில் நின்றும் உள்ளதாகும்.

எங்களுடைய ஷெய்க் அபூ அப்திர்ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்-ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

சரியான வழி முறை (மன்ஹஜ்)யில் நின்றும் உள்ளது தான் உன்னுடைய ஆத்மாவை துல்லியமாகக் கணக்கிடுவது ஆகும். அதனைக் கொண்டு செயல்படுவதற்கு அல்லாஹ்விடம் நல்லுதவியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அந்தச் செயல் அல்லாஹ்வுக்காகவா? அல்லது அவன் அல்லாதவனுக்காகவா?

விளையாட்டுத்தனமானவனே!  விளையாட்டுத்தனமான ஆத்மாவே! நீ யாரை  நோக்குகிறாய்?  இந்த ஆத்மா விளையாட்டுத்தனமானது; நீ அல்லாஹ்வை நோக்குகிறாயா? அல்லது மக்களை நோக்குகிறாயா?

மக்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள்? 

நீ உன்னுடைய எண்ணத்தை (நிய்யத்தை) சீர் திருத்திக் கொள்! எண்ணத்தை சீர் திருத்திக் கொள்வது என்பது; நீ மேற்கொள்கின்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதைச் சீர் திருத்திக் கொள்வது ஆகும். மேலும் இந்தச் செயலின் மூலம் நாடப்படுவது என்ன என்பதை நீ சரி பார்த்துக் கொள்; (அந்தச் செயல் பாடு) சொல்லாக அல்லது செயலாக இருந்தாலும் சரியே!

எனவே நீ உன்னுடைய எண்ணத்தை சீர் திருத்தினால்; உன்னுடைய அதிகமான நலன்கள் சீரடையும். நீ செய்கின்ற அட்பமான விஷயங்களுக்கு அதிகமான கூலிகள் கொடுக்கப்படுவாய். எங்களுடைய (ஸலபுகள்) முன்னோர்கள் எண்ணத்தை சிகிச்சை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். எந்த அளவுக்கு என்று சொன்னால்; இமாம் ஸுப்யான் அஸ்-ஸவ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: “எண்ணத்தைப் போன்று எந்த ஒரு விஷயத்தையும் நான் சிகிச்சை செய்ய வில்லை”.

இதனை (எண்ணத்தை)க் கொண்டு நாடப்படுவது என்ன? 

சொல் அல்லது செயல், மேலும் கொடுப்பது அல்லது தடை செய்வது; இந்த வழிமுறைகள் (மன்ஹஜ்) அனைத்தும் அல்லாஹ்வின் புத்தகத்திலும்  அவனுடைய தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையில் நின்றும் உள்ளதாகும்.

ஒரு மாணவன் தன்னுடைய வாழ்க்கையிலும்; அறிவைத் தேடுவதிலும்; வணக்க வழிபாட்டிலும்; மேலும் மார்க்கத்திலும்; அதனைக் கடை பிடிப்பது சீரான வழிமுறை (மன்ஹஜ்)யில் நின்றும் உள்ளதாகும்.

அல்லாஹ் அவனுக்கு (மாணவனுக்கு) இந்த வாழ்விலே வெற்றியை அளிப்பானாக! மேலும் ஷைத்தானிடமிருந்தும் அவனுடைய குழப்பங்களிலிருந்தும் அவனை பாதுகாப்பானாக! நாங்கள் அனைவரும்  நிய்யாஹ் எனும் எண்ணத்தின் பால் மிகத் தேவை உடையவர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்விடம் நல்லுதவியை கேட்டுக்கொள்கின்றோம்! 

உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

“رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏”

“எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதே! மேலும், உன் புறத்திலிருந்து றஹ்மத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி ஆவாய் . (சூரா அல இம்ரான்:8)

பதில் அளிக்கப்பட்ட திகதி : 19/ துல் ஹிஜ்ஜஹ்/ 1443.

தமிழாக்கம்: அபூ உஸாமா ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானீ.

5/ முஹர்ரம்/1444 ❘❘ 3/08/2022

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)