بسم اللــــه الرحمـــــــــن الرحيم
உண்மயான ஆண்மக்களாக, அல்லாஹ்வின் இல்லங்களுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுகையை நிலை நாட்டி; பின்னர் மஸ்ஜிதில் அமர்ந்து அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழியில் கற்றுக் கொள்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பின்வரும் நான்கு சிறப்புக்களை கொடுக்கின்றான்.
- அல்லாஹ்வின் ஸகீனத் அவர்கள் மீது இறங்குகின்றது.
- அல்லாஹ்வின் கருணை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.
- மலாயிகாமார்களும் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
- அல்லாஹ் அவர்களை அவனுக்கு மத்தியில் இருக்கும் மலாயிகாமார்களிடத்தில் புகழ்ந்து பேசுகின்றான்.
மார்க்க அறிவைத் தேடுவது இபாதாவாகும்.
இந்த இபாதாவைக் கற்கும்போது மேலான ஒழுக்கங்களை பேணுவது கடமையாகும்.
இந்த மார்க்க அறிவைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும்.
- அல்-இஹ்லாஸு லில்லாஹ்: அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி இபாதத் என்ற நிய்யத்தில் அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- இத்திபாஉஸ் ஸுன்னாஹ்; நபி ﷺ அவர்களின் வழிமுறையில் (ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தில்) அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- எந்த அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த அறுவுக்கு முன்னுறிமையும் முக்கியத்துவமும் கொடுத்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- அறிவைத் தேடிப் பிரயாணம் செய்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- அறிவை நம்பிக்கைக்குறிய இடத்திலிருந்து பெற்றுக் கற்றுக் கொள்ளல்.
- அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் இருந்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
- பொறுமையாக அறிவைக் கற்றுக் கொள்ளல்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்வதில் பேணப்பட வேண்டிய; மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளை ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்துக் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.