بسم الله الرحمن الرحيم
அல்லாஹுத்தஆலா யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி மூலமாக ஐந்து கட்டளைகளைக் கொடுத்து; பனூ இஸ்ரவேலர்களுக்கு அவைகளை எத்திவைக்குமாறும் செயல்படுத்துமாறும், ஏவினான்.
அப்போது நபி யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்விடயத்தை சற்று பிற்போட்டார்கள்.
அப்போது நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்; நிச்சயமா அல்லாஹ் உங்களுக்கு ஐந்து விடயங்களைக் கொண்டு கட்டளையிட்டான். அவகளை செயல்படுத்துமாறும், பனூ இஸ்ரவேலர்களுக்கு எத்திவைக்குமாறும், அவகளை அவர்கள் செயல்படுத்துமாறும்; நீங்கள் அவைகளை எத்திவைக்காவிட்டால்; நான் அவைகளை எத்திவைத்து அவர்களுக்கு ஏவுவேன்.? என்று கூறினார்.
அதற்கு நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; என்னை முந்திக் கொண்டு அவைகளை அவ்வாறு நீங்கள் இஸ்ரவேலர்களுக்கு எத்திவைத்தால்; அல்லாஹுத்தஆலா எனக்கு தண்டனையை தருவான். இல்லாவிட்டால் நான் பூமியால் விழுங்கப்படுவேன். என்று நான் பயப்படுகிந்ரேன் என்று கூறினார்கள்.
அதன் பின்னர் பைத்துல் மக்தஸில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களை ஒன்று சேர்த்தார்கள்; எனவே மக்கள் மஸ்ஜிதில் ஒன்று கூடினார்கள். அதேபோல் உயர்ந்த இடங்களில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது நபியவர்கள் இந்த ஐந்து கட்டளைகளையும் மக்களுக்கு எத்திவைத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ்! அந்த ஐந்து கட்டளைகள் என்ன என்பதை அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல்-ஹிந்தி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் இந்த நான்கு பாடங்களையும் செவிமடுத்து கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.