வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வட்டிற்கு எதிரான போரை அறிவித்துவிட்டார்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

❖❖ ஏ மனிதா நீ எங்கே இருந்து உன்னுடைய பணங்களை சம்பாதிக்கிறாய்?

❖❖ வட்டி (வாங்கித்) தின்கிறவர்கள்; அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட பைத்தியம் பிடித்தவர்களைப் போலல்லாது எழமாட்டார்கள்.

❖❖ அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாகவும், வட்டியை ஹராமாகவும் ஆகியுள்ளான்.

❖❖ வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

❖❖ வட்டி எடுப்பவர்களே! கொடுப்பவர்களே! எழுதுபவர்களே! அதற்கு சாட்சியாளர்களே! உங்களை அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சபிக்கிறார்கள்.

❖❖ வட்டி எடுப்பது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளதாகும்

❖❖ வட்டி எழுபத்தி மூன்று வகைகளாகும். அதில் ஆகக் குறைந்த நிலை தன் தாயுடன் உடல் உறவு கொள்வதற்கு சமனானது ஆகும்; அதன் உயந்த நிலை ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவது ஆகும்.

❖❖ வட்டி என்று அறிந்து கொண்டு ஒரு தீனார் அளவு வட்டியை உண்பது; முப்பத்தி நான்கு தடவைகள் விபச்சாரம் செய்வதற்கு சமமானதாகும்.

❖❖ எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ!  அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் கீழ்காணும் நல்லுபதேசத்தை செவிமடுத்து வட்டியினால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)