ஷரஹ் – அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா [01]

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

புத்தகத்தின் பெயர்:அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

ஆசிரியர்:அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்கம்: தவ்ஹீத்,  பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும்  அடிப்படைகள்

தமிழ் மொழி மூலம் விளக்க உரை:அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நாவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்க தொகுப்பு: அபூ அப்ஸர்

தமிழ் மொழி மூலமாக இப்புத்தகத்திற்கான விளக்கவுரையை இலங்கையின் ஹெடன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  எமது கண்ணியத்திற்குறிய சகோதரர் அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)  அவர்கள் மிக அழகாகவும், சிறப்பாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் செய்துள்ளார்கள். அந்த உரையின் தமிழ் தொகுப்பே இந்த ஆக்கம்.

பாடம்: 01

முகவுரை தொடர் – 01

بسم الله الرحمن الرحيم

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

மேலான அல்லாஹுத்தஆலா தன்னுடைய சிறப்பான புத்தகமான அல்-குர்ஆனில் கூறுகின்றான்:

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ

 “உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கூறுவான்.) (ஸூரத்துல் முஃமினூன்: 115)

அதேபோல் மேலான அல்லாஹுத்தஆலா இன்னும் ஒரு ஆயத்தில் கூறுகின்றான்:

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏

எத்தகைய கேள்விகணக்கும் கேட்கப்படாமல்) வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா? (ஸூரத்துல் கியாமா: 36)

இவ்வாறான நினைப்புக்கள் காபிர்களுடையதாகும் என்பதை மேலான அல்லாஹுத்தஆலா இன்னும் ஒரு ஆயத்தில் பின்வருமாறு கூறுகின்றான்:

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ؕ ذٰ لِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ

வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும், (ஸூரத்து ஸாத்: 27)

மனிதன் படைக்கப்பட்டதற்கான நோக்கம்:

அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதனை மேலான ஒரு நோக்கத்திற்காகப் படைத்துள்ளான்.

இதனை அறிந்து கொண்டவர்கள்தான் முஸ்லிம்கள், முஃமினூன்கள்.

இந்த நோக்கத்தை அல்லாஹுத்தஆலா தன்னுடைய புத்தகத்திலும், நபி ﷺ அவர்கள் மூலமாகவும் மிகவும் தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளான்.

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ

மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (ஸூரத்துத் தாரியாத்: 56)

இதுதான் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். இது அல்லாத வேறு எந்த நோக்கமும் இல்லை.

இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் அல்லாஹுத்தஆலா மனிதர்களையும் ஜின்களையும் இந்த உலகத்தில் படைத்துள்ளான்.

எனவே புத்திசாலியான மனிதன் இந்த நோக்கத்தை விளங்கி வாழ்க்கையில் நிலை நாட்டுவான்.

படைத்த ரப்பை பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது மிருகங்களை விடவும் கேடான ஒரு நிலையாகும்.

அதனால்தான் மேலான அல்லாஹுத்தஆலா காபிர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்:

اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌

இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர் (ஸூரத்துல் அஃராப்: 179)

மனிதன் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான வழி என்ன?

இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான ஒரே வழி அறிவைப் பெற்றுக் கொள்வதாகும்.

ஸஹாபாக்கள் காலத்தில் இந்த அறிவு நபி ﷺ அவர்கள் மூலம் நேரடியாக கொடுக்கப்பட்டது.

அல்லாஹுத்தஆலாவிடம் இருந்து வந்த வஹியை நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்து செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இமாம் இப்னு கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: அல்-அமல் கஆயா, வல் இல்ம் வஸீலா –

முக்கிய நோக்கம்: இபாதா-செயல்கள்.

அதற்கான காரணம்-வழி: அறிவு.

எனவே அறிவு என்பது ஒரு வஸீலா; அந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு வழியாகும்.

ஆனால் அல்லாஹ்வைப் பற்றிய அறிவைத்தவிர:

அல்லாஹ்வைப் பற்றிய அறிவு; அல்லாஹ்வின் திரு-நாமங்களை அதன் பொருள்களுடன் விளங்கிக் கொள்ளல். மேலும் அதன்படி செயல்படல்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவு அறிவுகளிலே மிகவும் சிறந்த அறிவாகும்.

இதனை எங்களுக்கு வஸீலா என்று சொல்ல முடியாது. ஆனால் இது ஒரு முக்கியமான ஒரு அறிவாகும்.

இந்த தீனில்-(மார்க்கத்தில்) வந்திருக்கும் ஏனைய அறிவுகளை கற்றுக் கொள்வதன் நோக்கம்:

எமது இபாதாக்களை செய்து ஸாலிஹான அமல்களை நிலை நாட்டுவது ஆகும்.

இந்த மார்க்க அறிவை யார் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் இந்த உலகத்திலும், மறுமையிலும் நஷ்டவாளி ஆவார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)