ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-05

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரைஅபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்புஅபூ அப்ஸர்

பாடம்: 05

முன்னுரை

1 – இப்புத்தகம் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அகீதாவை (கொள்கையை)த் தெளிவுபடுத்தும் வகையில் கவிதை அடிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய அகீதாவின் அனைத்து அடிப்படைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்காவிட்டாலும் மிக முக்கியமான சில அடிப்படைகளை உள்ளடக்கியிருக்கின்றது.

இங்கு இமாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெளிவுபடுத்தும் கொள்கை கோட்பாடுகள் அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

இப்புத்தகத்தில் இமாம் அவர்கள் பதினாறு கவிதை அடிகளில் அகீதாவின் மிக முக்கியமான சில அடிப்படைகளைப் பேசியுள்ளார்கள்.

இமாமவர்கள் இந்த பதினாறு கவிதை அடிகளிலும் சில அடிப்படையான அகீதாவின் அம்சங்களை பேசியுள்ளார்கள். (அதிகமான அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த உலமாக்களும் இவ்விடயங்களைப் பற்றிப் பேசியுள்ளார்கள்.)

அவையாவன:

 • ஸஹாபாக்களின் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு.
 • அல்-குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் அகீதா (கொள்கைக் கோட்பாடு).
 • அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவில் இருந்தே அகீதா (கொள்கைக் கோட்பாடு) எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விளக்கம்.
 • அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகள் விடயத்தில், அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அகீதா – கொள்கைக் கோட்பாடு).
 • அல்லாஹ் சுஃப்ஹானஹூ வதஆலாவை வெற்றுக் கண்களால் பார்த்தல் பற்றிய விடயம்.
 • அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பது தொடர்பான விடயங்கள்.
 • நன்மை தீமைகள் நிறுக்கப்படும் மீஸான் (தராசு) விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு.
 • ஹவ்ள் பற்றிய விளக்கம்.
 • ஸிராத் – நரகத்திற்கு மேலால் போடப்பட்டிருக்கும் பாலம் பற்றிய தெளிவுகள்.
 • சொர்க்கம், நரகம், கப்ரின் வேதனை மற்றும் கப்ரின் இன்பங்கள்  பற்றிய விளக்கங்கள்.

2 – லாமிய்யா கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகள்:

இப்புத்தகத்திற்கு விரிவுரைகள் மூலமும் புத்தக வடிவிலும் அதிகமான ஷரஹ்-விளக்கவுரைகளை உலமாக்கள் செய்திருக்கின்றார்கள். இன்றும் அப்பணி தொடர்துகொண்டுதான் இருக்கிறது. இப்புத்தகத்திற்கு நவீன கால உலமாக்களால் அதிகமன சேவைகள் செய்யப்பட்டுள்ளது.

 • அல்-லஆலி அல் பஹிய்யா ஷரஹ் லாமிய்யதி ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் – அல்-இமாம் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-மர்தாவி அல்-ஹம்பலி ரஹிமஹுல்லாஹ். (இந்த இமாம்தான் லாமிய்யாவிற்கு ஆரம்பமாக ஷரஹ் செய்தவர்.)
 • குன்யதுஸ் ஸாஇல் பிமா பீ லாமிய்யதி ஷெய்கில் இஸ்லாம் மினல் மஸாஇல் – அஷ்ஷெய்க் அல் அல்லாமா அஹ்மத் இப்னு யஹ்யா அன் நஜ்மீ ரஹிமஹுல்லாஹ்.
 • தைஸ்ஸீர் அர்-ரப்பிர் ரஹீம் ஷரஹ் லாமிய்யதில் முஜத்தித் அஹ்மத் இப்னி அப்தில் ஹலீம் – இமாம் ஸெய்த் இப்னு ஹாதி அல்-மத்கழி ரஹிமஹுல்லாஹ்.
 • ஷரஹ் லாமிய்யதி ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் – அஷ்-ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்.
 • ஷர்ஹ் லாமிய்யது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் – அஷ்-ஷெய்க் அப்துல் கரீம் அல்-குதைர் ஹபிழஹுல்லாஹ்.
 • அத்துஹ்பதுல் அலிய்யாஹ் அலல் மன்லூமதில் லாமிய்யா அல்-மன்ஸூபா லி ஷெய்கில் இஸ்லாம் இப்னி தைமிய்யாஹ் – அஷ்-ஷெய்க் முஹம்மத் பாஜம்மால் ஹபிழஹுல்லாஹ்.
 • இபாததுல் அனாம் பீ ஷர்ஹி லாமிய்யது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் – அஷ்-ஷெய்க் கமால் இப்னு ஸாபித் அல்-அதனி ரஹிமஹுல்லாஹ்.
 • கஷ்புல் லிஸாம் பிஷர்ஹில் லாமிய்யதில் மன்ஸுபா லி ஷெய்கில் இஸ்லாம் அபில் அப்பாஸ் அஹ்மத் இப்னி தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் – அஷ்-ஷெய்க் ஹுஸைன் அல்-ஹதீபி ஹபிழஹுல்லாஹ்.

இவர்கள் அல்லாத இன்னும் பல உலமாக்கள் இப்புத்தகத்திற்கு ஷரஹ் செய்திருக்கின்றார்கள்.

இந்த கவிதைத் தொகுப்பின் பெயர்:

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கவிதைத் தொகுப்பிற்கு எந்தப் பெயரையும் சூட்டவில்லை.

மாறாக இந்த கவிதைத் தொகுப்பின் அடிகளில் வரும் இறுதி எழுத்து ‘லாம்’ என்ற எழுத்தில் முடிவடைகின்றது. எனவே உலமாக்கள் இக் கவிதைத் தொகுப்பிற்கு “அல்-லாமிய்யா”.  என்று பெயர் சூட்டினார்கள்.

இவ்வாறு கவிதை அடிகளில் வரும் இறுதி எழுத்து ஒரே எழுத்தில் முடிவடைந்தால் அந்த எழுத்தை அடிப்படையாக வைத்து பெயர் சூட்டுவது  உலமாக்களின் ஒரு வழமையாகும். உதாரணமாக இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இன்னும் ஒரு கவிதைத் தொகுப்பு “தாஇய்யா” அதன் அடிகளின் இறுதி எழுத்து ‘தா’ என்ற எழுத்தில் முடிவடைகின்றது. இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கவிதைத் தொகுப்பு “நூனிய்யா” அதன் அடிகளின் இறுதி எழுத்து ‘நூன்’ என்ற எழுத்தில் முடிவடைகின்றது.

இன்னும் சில உலமாக்கள் இக் கவிதைத் தொகுப்பிற்கு அகீதது இப்னு தைமிய்யாஹ் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

3 – இந்த கவிதைத் தொகுப்பிற்கு உலமாக்கள் நீளமான, நடுத்தரமான, சுருக்கமான விளக்கங்களைச் செய்துள்ளார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீதாவின் மிக முக்கியமான அடிப்படைகளை அனைவரும் இலகுவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கவிதைத் தொகுப்பை பதினாறு அடிகளில் மிக அழகாக விளக்கியுள்ளார்கள்.

எனவேதான் உலமாக்கள் ஆரம்ப கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கு இக்கவிதைத் தொகுப்பை மனனமிடுமாறு உபதேசிப்பார்கள்.

கவிதை அடிப்படையில் எழுதப்பட்ட அகீதா நூல்கள் மூன்று வகைப்படும்.

I.          சுருக்கமானவை

A.         இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் லாமிய்யா.

B.         இமாம் இப்னு அபீதாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹாஇய்யா.

II.         நடுத்தரமானவை

A.         ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அத்-தாஇய்யா,

B.         அல்-இமாம் அல்-ஹாபிழ் அல்-ஹகமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கல்லமுல் வுஸூல்

III.        நீளமானவை

A.         இமாம் அல்- கஹ்கானி அவர்களின் நூனியத் அலல் கஹ்தானி.

B.         இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நூனிய்யா – (6000கவிதைகள் – இதுபோன்ற நீளமான ஒரு கவிதைத் தொகுப்பு அகீதாத் துறையில் எழுதப்படவில்லை.)

4 – லாமிய்யா கவிதைத் தொகுப்பின் சிறப்புக்கள்.

1)         சுருக்கமானவை

2)         இலகுவான கவிதை அடிகள்

3)         அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அகீதா கவிதைத் தொகுப்பை சுருக்கமாகவும் இலகுவாகவும் தந்துள்ளார்கள்.

4)         ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு இமாம் ஆவார். எனவே அவர்களால் இக்-கவிதைத் தொகுப்பு தொகுக்கப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும்.

5)         இக்கவிதைத் தொகுப்பு   அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அதிகமான அகீதாவின் அடிப்படைகளைப் பற்றி பேசுகின்றது.

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)