ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-08

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரைஅபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்புஅபூ அப்ஸர்

பாடம்: 08

முதல் கவிதை அடிக்கான விளக்கம்

يَا سَائِلي عَنْ مَذْهَبِي وَعَقِيْدَتِي *** رُزِقَ الهُدَى مَنْ لِلْهِدَايَةِ يَسْأَلُ

‘என்னுடைய போக்கைப் பற்றியும் அகீதாவைப் பற்றியும் கேட்பவனே! ✽✽✽ நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்’

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கே இக்கவிதை அடிகளின் மூலம் பதில் அளித்திருக்கிறார்கள்.

விளக்கம்

முதலாம் கவிதை வரியின் ஆரம்ப பகுதி: يَا سَائِلي عَنْ مَذْهَبِي وَعَقِيْدَتِي (“என்னுடைய போக்கைப் பற்றியும் அகீதாவைப் பற்றியும் கேட்பவனே!”)

மத்கப் என்ற சொல்லின் விளக்கம்:

மத்கப் எனும் சொல் “தகப” என்ற  இறந்தகால வினைச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். தகப என்றால்; சென்றான் என்று பொருள்படும். எனவே மத்கப் என்றால் செல்லக்கூடிய இடம் என்று அரபி பொழி அடிப்படையிலான விளக்கம் ஆகும். ஆகவே இங்கு மத்கபீ என்ற சொல்லின் நாட்டம் இமாம் அவர்கள் அகீதா விடயங்களில் செல்லக்கூடிய பாதை ஆகும்.

அகீதா என்ற சொல்லின் விளக்கம்:

அரபி மொழி அடிப்படையிலான விளக்கம்;

அகீதா எனும் சொல் “அக்து” என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இணைத்தல், கட்டுதல் என்பதே இதன் பொருள்.

மேலான அல்லாஹுத் தஆலா பலக் என்ற ஸூராவில்  கூறுகின்றான்:

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِ

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், (அல்குர்ஆன் : 113:4)

நான் என்னுடைய உள்ளத்தை இவ்வாறான கொள்கைகளைக் கொண்டு கட்டிவைத்திருக்கின்றேன்.

மார்க்கத்தின் பார்வையில் அகீதா;

ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும். இதன்படி நல்லொழுக்கமும் நற் கொள்கையும் உள்ள ஒருவனைப் பற்றிக் குறிப்பிடும் போது لَهُ عَقِيْدَةٌ حَسَنَةٌ அவன் ஒரு நல்ல கொள்கைவாதி என்பர். மேலும் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒரு ஈடேற்றமான அகீதாவாகும்.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கவிதை அடியில் “அகீதா” என்ற சொல்லில் எதனை நாடுகின்றார்கள் என்றால்; இஸ்லாமிய அகீதா விஷயங்களில் இமாம் அவர்கள் எவ்வாறான கொள்கை கோட்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த கவிதை அடிகளை எழுதியுள்ளார்கள்.

இஸ்லாமிய அகீதா என்பது;

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه  أنَّ النبيَّ ﷺ سُئلَ عَنِ الإِيمَانِ؟ فقَالَ: «أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ»

உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அவர்கள் கூறுகின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஈமான் என்பது 1– அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல் 2– மலக்குகள் மீது ஈமான் கொள்ளுதல் 3– வேதங்கள் மீது ஈமான் கொள்ளுதல் 4– தூதர்கள் மீது ஈமான் கொள்ளுதல் 5– மறுமை நாள் மீது ஈமான் கொள்ளுதல்  6– நன்மை தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்று விதியின்  மீது ஈமான் கொள்ளுதல் ஆகும்.

இவைகள்தான் அகீததுல் இஸ்லாமிய்யாஹ் – இஸ்லாமிய அகீதா; இந்த ஆறு ஈமான் சார்ந்த விஷயங்களையும் மேலும் அவைகள் எவைகளை வேண்டி நிற்கின்றதோ அவற்றையும்  நம்பிக்கை கொள்வதாகும்.

முதலாவது கவிதை வரியில் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு தனி நபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்கள். மேலும் இந்த வரியை வாசிப்பவர்களை நோக்கியும் பொதுவாக பேசியிருக்கிறார்கள்.

 இந்த கவிதை அடிகளை வாசிக்கின்றவர்களை நோக்கி பேசியிருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் கேட்ட கேள்விற்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; இந்த கவிதை அடிகளை வாசிக்கின்றவர்களை நோக்கி பொதுவாக முதலாவது கவிதை வரியில் பதில் அளித்துள்ளார்கள். இது எங்களுடைய ஸலபி உலமாக்கள் கடைபிடித்த ஒரு முறையாகும்.

எவரெல்லாம் தங்களுடைய கொள்கைக் கோட்பாட்டை அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றார்களோ! அவர்களைப் பார்த்து முதலாவது கவிதை வரி பேசுகின்றது.

இமாம் அவர்கள் இந்த கவிதை அடிகளில் எதனை பதிவிட்டிருக்கின்றார்களோ! அதனை நல்ல முறையில் கற்றுக் கொண்டால்; ஷெய்குல் இஸ்லாமின் கொள்கைக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களது ஏனைய புத்தகங்களின் மூலமும் அவருடைய அகீதாவை அறிந்து கொள்ளலாம்.

முதலாம் கவிதை வரியின் இறுதிப் பகுதி: رُزِقَ الهُدَى مَنْ لِلْهِدَايَةِ يَسْأَلُ

(நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்)

எவரெல்லாம் கற்றுக் கொள்வதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும், அதனை எத்திவைப்பதற்கும் ஆசைப்படுகின்றார்களோ! அவர்களுக்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் துஆச் செய்திருக்கின்றார்கள். இது ஒரு ஸுன்னாவாகும்.

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دعوةُ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ “. رَوَاهُ مُسلم

அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள், ”ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ”இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.

எனவே இங்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிதாயத்தை(நேர்வழியை)க் கொண்டு துஆச் செய்திருக்கின்றார்கள்.

நேர்வழி என்றால் என்ன?

எந்த ஒரு வளைவும் இல்லாத “அஸ்ஸிராத்” நேரான பாதை ஆகும். மேலும் அப்பாதையில் எந்த நேரத்திலும் ஒரு நிலையில் இருத்தல்.

மேலான அல்லாஹுத்தஆலா ஸூரத்துல் பாத்திஹாவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் பின்வருமாறு கூறுகின்றான்:

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

‏எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.

எனவே ஸிராத்-நேர்வழி என்பது அல்லாஹ்வுடைய மார்க்கம் ஆகும். அதனை சரியான வழியில் பின்பற்ற வேண்டும்.

பல உலமாக்கள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் போன்று; தங்களது புத்தகங்களை ஆரம்பிக்கும் போது இவ்வாறு துஆக் கேட்டு ஆரம்பித்துள்ளார்கள்.

உதாரணமாக; اِعْلَمْ – رَحِمَكَ اللَّهُ – நீ அறிந்து கொள்; அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக. அல்லது ஃகபரல்லாஹு லக் – அல்லாஹ் உன்னுடைய பாவங்களை மன்னிக்கட்டும்.

புத்தகங்களை ஆரம்பிக்கும் போது இவ்வாறு துஆக் கேட்டுவிட்டு ஆரம்பிப்பது ஸலபி  உலமாக்களின் ஒரு வழிமுறையாகும்.

இங்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் அவர் நேர்வழியைக் கேட்கவில்லை. மாறாக ஒரு மனிதனை நேர்வழிப்படுத்துவதற்குறிய காரணிகளைத்தான் கேட்டார்கள். அந்த காரணிகளைத்தான் இந்த லாமிய்யா கவிதை அடிகளில் இமாம் அவர்கள் பேசுகின்றார்கள்.

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)