ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

கேள்வி:

நாங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஸலஃபி சகோதரர்கள்.
எங்களுக்கு ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது.
நாங்கள் அதில் மார்க்க கல்வியை படித்துக் கொண்டும்; எங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தஃவா ஸலஃபியாவை செய்து கொண்டும் வருகிறோம்.

சில நாட்களாகவே இங்குள்ள அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக யார் ஷிர்கை எச்சரித்து தவ்ஹீதின் பக்கம் தஃவா செய்து வருகின்றார்களோ அவர்களை பிரத்தியேகமாக கண்காணித்து நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறது.
சில நேரங்களில் அவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தவும் செய்கின்றது.

இத்தகைய சூழலில், பயத்தின் காரணமாக எங்களுடன் இருந்த அதிகமான சகோதரர்கள் வழிகெட்டு ஜம்ஈயத்துக்களுடன் – கூட்டமைப்புக்களுடன் – சேர்ந்து கொண்டார்கள்.

மேலும் சில முஸ்லிம்கள் காஃபிர்களுடைய அதிகமான விஷயங்களில் அவர்களோடு இணைந்து அவர்களை புகழ தொடங்கி விட்டார்கள். எந்த அளவுக்கு இந்த காரியம் சென்று விட்டதென்றால், சிலர்கள் காஃபிர்களுடைய கோயில்களுக்கு சென்று அவர்களுடைய வணக்க வழிபாடுகளில் சிலவற்றை நிலைநாட்ட கூடியவர்களாக ஆகிவிட்டார்கள்.

இந்த நிலையில் நாங்கள் தஃவதுஸ் ஸலஃபியாவை எந்த முறையில் நிலைநாட்ட வேண்டும் என்று நாம் உங்களுடைய -நஸீஹா-உபதேசத்தையும் வழிகாட்டலையும் எதிர்பார்கின்றோம்.

யார் சிரமங்கள் ஏற்பட்ட சூழலிலும் பொறுமையாக இருந்து தஃவா செய்ய முடியுமோ அவர் அவ்வாறு செய்யட்டும்.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ يَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ‌ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ‌ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏ [سورة النساء: ١٠٤]

நீங்கள் துன்பமடைந்திருப்பீர்களானால், நீங்கள் துன்பம் அடைந்தது போன்று நிச்சயமாக அவர்களும் துன்பம் அடைவர், மேலும், அவர்கள் ஆதரவு வைக்காததை (நற்கூலியை) அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:104)

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏ [سورة العنكبوت:٢]

மனிதர்கள் ”நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்களா?
(அல்குர்ஆன் 29:2)

وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏ [سورة العنكبوت:٣]

இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கின்றோம், ஆகவே, உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான், பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான்.
(அல்குர்ஆன் : 29:3)

وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ‏ [سورة محمد: ٣١]

அன்றியும் உங்களில் அறப்போர் புரிவோரையும், பொறுமையாளர்களையும் நாம் அறிந்து (அறிவித்து) விடும் வரை, உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம், இன்னும், உங்களுடைய செய்திகளையும் நிச்சயமாக நாம் வெளிப்படுத்துவோம்.
(அல்குர்ஆன் : 47:31)

நிச்சயமாக பொறுமை தேவை.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا‌ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ‌ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاِى الْمُرْسَلِيْنَ‏ [سورة الأنعام:٣٤]

திட்டமாக உமக்கு முன் (நம்முடைய) தூதர்களும்(இவ்வாறே) பொய்யாக்கப்பட்டனர், தாம் பொய்யாக்கப்பட்டதன் மீதும், துன்புறுத்தப்பட்டதன் மீதும், அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர், அல்லாஹ்வுடைய வார்த்தை (பேச்சுக்)களை மாற்றுகிறவர் எவரும் இல்லை, (நம்) தூதர்களின் (இத்தகைய) செய்தி திட்டமாக உம்மிடம் வந்துமிருக்கிறது.
(அல்குர்ஆன் : 6:34)

ஆனால், யாருக்கு பொறுமையாக அங்கு இருந்து தஃவா செய்வதற்க்கு சக்தி இல்லையோ; அதாவது மேலே குறிப்பிட்டதைப் போன்று மார்க்கத்தை விட்டுக் கொடுத்து; காஃபிர்களுக்கும், வழிகேடர்களுக்கும் கைக்கூலிகளாக மாறி; அவர்களால் இவர் வழிநடத்தப்பட்டு; தன்னுடைய மார்க்கம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு பலவீனமாகுவதை யார் காண்கின்றாரோ; அவர் அவருடைய மார்க்கத்தை எங்கு சென்றால் பாதுகாத்து கொள்ள முடியுமோ அங்கு சென்று அல்லாஹ்வை வணங்குவது அவர் மீதுள்ள கடமையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ، فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لاَ. فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا.

பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு வணக்கசாலியிடம் வந்து கேட்டார். அந்த வணக்கசாலி, ‘உனக்கு பாவமன்னிப்புக் கிடைக்காது’ என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது கல்வியறிவு உடைய ஒருவர், ‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!’ என்று அவருக்குக் கூறினார்.

நூல்: ஸஹீஹ் அல்-புகாரி : 3470.

எனவே, 99 மனிதர்களை கொன்ற அந்த மனிதனுக்கு, தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, அல்லாஹ்வை வணங்கக்கூடிய மக்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு செல்லுமாறு ஆலோசனை சொல்லப்பட்டது. அதே போன்று தான், யார் சோதனைகளுக்கு உள்ளாகி தன்னுடைய மார்க்கம் பலவீனமடைந்து விடும் என்று அஞ்சுகிறாரோ அவர் எந்த இடத்திலே தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொண்டு அல்லாஹ்வை வணங்க முடியுமோ அங்கு அவர் செல்ல வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் கேள்வியில் குறிப்பிட்டதைப் போன்று, அந்த அளவிற்கு அவருடைய மார்க்கத்தில் பலவீனம் ஏற்பட்ட நிலையில் அவர் அந்த ஊரிலே இருப்பதற்கு அவருக்கு அனுமதி கிடையாது.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏ [سورة النساء:٩٧]

தமக்குத்தாமே அநீதமிழைத்துக் கொண்டவர்களாக இருக்க அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களிடம்) “நீங்கள் எதில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “இப்பூமியில் நாங்கள் பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறுவார்கள், (அதற்கு மலக்குகள்) “அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? நீங்கள் (இருந்த) இவ்விடத்தைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள், இத்தகையோர், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், செல்லுமிடத்தால் அது மிக்க கெட்டது.
(அல்குர்ஆன் : 4:97)

اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًا ۙ‏ [سورة النساء:٩٨]

(ஆனால்) ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்களிலும் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர, (பலவீனமான இவர்கள்) யாதொரு உபாயம் செய்துகொள்ள சக்திபெற மாட்டார்கள், (அதை விட்டு வெளியேற) எந்த வழியையும் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 4:98)

فَاُولٰٓٮِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ‌ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا [سورة النساء:٩٩]‏

ஆகவே, அத்தகையோர் – அவர்களை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும், இன்னும், அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 4:99)

எனவே, சோதனைகளின் போது தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ள யாருக்கு முடியவில்லையோ அத்தகையோரில் பலவீனமாக இருப்பவர்களை தவிர யாருக்கு தன்னுடைய நாட்டை விட்டு வெளியேற சக்தி இருக்கிறதோ அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவது அவர்கள் மீது கடமையாக இருக்கின்றது.

தன்னுடைய மார்க்கம் வீணாகுவதை பார்த்தும் அதை அப்படியே விட்டு விடக்கூடாது.

அதேபோன்று மக்களின் துன்புறுத்தல் காரணமாக மார்க்கத்தை விட்டு கொடுத்து போகவும் கூடாது.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِىَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ وَلَٮِٕنْ جَآءَ نَـصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَـقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ‌ اَوَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِىْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ‏ [سورة العنكبوت:١٠]

இன்னும் மனிதர்களில், “அல்லாஹ்வை நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம்” என்று கூறுகின்ற சிலர் இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் துன்புறுத்தப்பட்டால், மனிதர்களால் ஏற்படும் (அத்)துன்பத்தை, அல்லாஹ்வுடைய வேதனையைப் போலாக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்கின்றனர். உமது இரட்சகனிடமிருந்து (உங்களுக்கு) ஏதேனும் உதவி வந்து விட்டாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம்” என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
(அல்குர்ஆன் : 29:10)

அல்லாஹ்வுடைய தண்டனைகளும் மக்களுடைய துன்புறுத்தல்களும் ஒன்றாகுமா?

ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.

மேலும் கேள்வியில் குறிப்பிட்டதை போன்று அவர் ஒருபோதும் தன்னுடைய மார்க்கத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.

யாருக்கெல்லாம் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு பணி செய்து மார்க்கத்தை நிலைநாட்ட சக்தி இருக்கின்றதோ அவர் அவ்வாறே செய்யட்டும்.
மேலும் யாருக்கு மார்க்கத்தை நிலை நாட்ட சக்தி இல்லையோ அவர் தன்னுடைய மார்க்கம் தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கப்பட்டு அதில் குறைவு ஏற்படுவதை அறிந்தும் தஃவாவை பாதுகாப்பதற்காக இங்கேயே இருப்பேன் என்று கூறுவது சரி கிடையாது.

எனவே, ஒருவர் தன்னுடைய மார்க்கத்தில் உறுதியாக இருக்க முடியாமல்; தன்னுடைய மார்க்கம் பலவீனம் ஆகிக் கொண்டிருப்பதை அறிந்த நிலையில் தஃவாவிற்காக தனது ஊரிலே இருப்பதைவிட எங்கு சென்றால் தனது மார்க்கத்தை பாதுகாத்து கொள்ள முடியுமோ அவர் அங்கு சென்று தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வதே சிறப்பாகும்.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா உங்களுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை மாறாக அல்லாஹ்வுடைய பூமி விசாலமாகத்தான் இருக்கின்றது.

8 ரபீஉல் ஆகிர் 1445 ஹிஜ்ரி.

அரபு மொழியில்:
https://sh-yahia.net/show_sound_13857.html.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)