بسم الله الرحمن الرحيم
அஷ்ஷெய்க் ஸலீம் இப்னு ஈத் அல்-ஹிலாலீ ஹபிளஹுல்லாஹ். (அஷ்ஷெய்க் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்).
தமிழாக்கம்: ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி.
மன்ஹஜுஸ் ஸலப்
ஸலபி என்பவன்..
ஸலபுகளின் வழியை முதலில் கற்றுக் கொள்கின்றவன்; அதன் பிறகு நற்செயல்களில் (மெய்யாகவே) அதனை பின்பற்றுகின்றவன்; மேலும் மனிதர்களிடம் இருந்து வரும் துன்பங்களின் போது பொறுமையை கடைபிடிப்பவன்; அவன் தான் ஸலபி ஆவான்.
ஸலபுகளின் வழியை; பரப்பக்கூடியவனாக இருக்க வேண்டும். மேலும் தெளிவான ஆதாரத்துடன்; ஸலபுகளின் போக்கில், அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். மக்களுக்கு அப்போக்கை தெளிவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு மத்தியில் அதை பரப்ப வேண்டும். இவன்தான் உண்மையான ஸலபி ஆவான்.
மன்ஹஜுஸ் ஸலபை அறியாத நிலையில் இருப்பவன், அல்லது அதை நன்கறிந்தும் பின்பற்றாமல்; மக்கள் எதிலே இருக்கின்றார்களோ! அதை பின்பற்றுகின்றவன், அல்லது மனோ இச்சையை பின்பற்றிக் கொண்டு ஸலபிய்யாவை வாதாடக் கூடியவன், இவனை பொறுத்தவரை, இவன் ஒரு ஸலபி அல்ல. ஸலபிய்யா என்று பெயர் சூட்டி, தான் ஸலபிதான் என்று வாதாடினாலும் சரியே.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.