ஸஹாபாக்களை அறிவோம்!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ் ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்கலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

ஸஹாபாக்கள் அனைவருக்குமே வெளிப்படையான தனிச் சிறப்பும் மதிப்பும் இருக்கின்றன. இருந்தபோதிலும் ஸஹாபாக்களில் சிலரை விட சிலருக்கு கூடுதலான சிறப்புகள் இருக்கின்றது. எவ்வாறு, நபிமார்கள் அனைவரும் சிறப்பானவர்கள் என்றபோதிலும்; அல்லாஹுத் தஆலா நபிமார்களில் சிலரை விட சிலரை சிறப்புகளால் மேன்மை படுத்தி உள்ளான் என்று கூறி இருக்கின்றானோ அதே போன்று;

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ

அத்தூதுவர்கள் அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். [சூரா அல்-பகரா: 253]

எனவே ஸஹாபாக்களில் சிலரை விட சிலருக்கு கூடுதலான சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் யாரும் கீழ்தரமானர்கள் அல்லர்.

ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர் முதன்மையானவர்:

1 – அபூபக்ர் (அஸ்-ஸித்தீக்) அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் (அபூ குஹாபா ரழியல்லாஹு அன்ஹு

அதன் பிறகு,

2 – உமர் இப்னுல் கத்தாப் (அல் ஃபாரூக்) ரழியல்லாஹு அன்ஹு

3 – உஸ்மான் இப்னு அப்ஃபான் (துன் நூரைன்) ரழியல்லாஹு அன்ஹு

4 – அலி இப்னு அபீ தாலிப் (வாலிதுஸ் ஸிப்தைன்) ரழியல்லாஹு அன்ஹு

மேற்கூறப்பட்ட நான்கு ஸஹாபாக்களும் (அஷரதுல் முபஷ்ஷரீன்) சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.

மேலும் (அல்-குலஃபாஉர் ராஷிதீன்) என்ற நேர்வழி பெற்ற தலைவர்களும் ஆவர்.

இவர்களுக்குப் பிறகு சிறப்புக்குறியவர்கள்:

5 – (அஷரதுல் முபஷ்ஷரீன்) சொர்க்கத்திற்கு நன்மாறாயம் கூறப்பட்டவர்களில் இடம்பெறும் மற்ற ஸஹாபாக்கள்

■ தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்.

■ அஸ் ஸுபைர் இப்னுல் அவ்வாம்.

■ அப்துர் ரஹ்மான் இப்னு அஃவ்ப்.

■ அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்.

■ ஸஅத் இப்னு அபீ-வக்காஸ்.

■ஸஈத் இப்னு ஸைத்.

இவர்களுக்குப் பிறகு சிறப்புக்குறியவர்கள்.

6 – முஹாஜிர்கள் ( المهاجرون ) – ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

7 – அன்ஸாரிகள் (الأنصار) – ஹிஜ்ரத் செய்து வந்த ஸஹாபாக்களுக்கு உதவிபுரிந்து வரவேற்பு செய்த ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

8 – அஹ்லு பத்ர் (أهل بدر) – பத்ருப் போரில் கலந்து கொண்ட ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

9 – அஹ்லு பைஅதிர் ரிள்வான் (أهل بيعة الرضوان) – ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

10 – மக்கா வெற்றிக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்று போர்களில் பங்குபெற்ற ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

11 – மக்கா வெற்றிக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்று போர்களில் பங்குபெற்ற ஸஹாபாக்கள் ரழியல்லாஹும அன்ஹும் அஜ்மஈன்.

12 – இவர்கள் அல்லாத ஏனைய ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.

நூல்: தைஸீர் அர்-ரப்பிர் ரஹீம் ஷரஹ் அல்-மன்தூமதில் லாமிய்யா.

தமிழில்: அபூ ஜுலைபிப் ஸாஜித் அஸ் ஸெய்லானி வஃப்பகஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)