• Home
  • ஹதீத்
  • அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்

அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ஹதீஸ் விளக்கம்

قَدَّرَ اللهُ وَمَا شَاءَ فَعَلْ

கத்தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல்

இந்த உலகத்திலும் மறுமையிலும் வெற்றியை பெற்றுக் கொள்ளும் ஒரு அழகிய வழிமுறையை கீழ்க்காணும் ஹதீஸின் விளக்கத்தினூடே இன்-ஷா அல்லாஹ்! கற்றுக் கொள்வோம்!

எமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து இருக்கவேண்டிய நபி ﷺ அவர்கள் கற்றுத்தந்த பல அழகிய வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவைகள் இன்று நாம் அறியாத அல்லது அறிந்தும் செயல்படுத்தாத அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ள விடயங்களாகவே காணப்படுகின்றன.

அவ்வாறு செயல் இழந்து காணப்படுகின்ற ஒரு அழகிய துதிச் சொல்லே “கத்தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல்” ஆகும்.

இந்த வார்த்தை மூலம் நபி ﷺ அவர்கள்; மனித வாழ்க்கை பொறிமுறையுடன் சிக்குண்ட மனிதனை அல்லாஹுத்தஆலாவின் விதியின் பால் அழைத்து வருகின்றார்கள்.

இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை முழுமையாக செவிமடுத்து கீழ்க்காணும் ஹதீஸின் விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! செயல் இழந்து காணப்படும் ஸுன்னாக்களை உயிர்ப்பிப்போம்!

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((…احرص على ما ينفعك، واستعن بالله ولا تعجز، وإن أصابك شيء فلا تقل لو أنِّي فعلت كان كذا وكذا، ولكن قل قدَّر الله وما شاء فعل، فإنَّ لو تفتح عمل الشيطان))  (رواه مسلم

அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: … உனக்குப் பயனளிப்பதையே நீ முயற்சி செய். இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். (முஸ்லிம்: 5178)

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அல்லாஹ்வின் விதி

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)