ஆண் பெண் கலப்பும் அதனால் தோன்றும் விபரீதங்களும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

(விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர். (ஸூரத்துல்ஆல இம்ரான்: 104)

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ

(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள், (ஸூரத்துல்ஆல இம்ரான்: 110)

நன்மையை ஏவி தீமையை தடுப்பதிலேயே எம் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கிறது.

ஒரு பாவத்தில் ஈடுபடுவது இன்னும் ஒரு பாவத்தின் பால் இட்டுச் செல்லும். ஒரு நலவில் ஈடுபடுவது இன்னும் ஒரு நலவின் பால் இட்டுச் செல்லும்.

பாவங்களை இலகுவாக கருதக்கூடாது. வீடுகளில், பாடசாலைகளில், சந்தைகளில், கடைகளில் மேலும் இதுபோன்ற ஏனைய இடங்கலில் பெண்களுடன் கலப்படமாக இருப்பதை நாம் இலகுவாக கருதலாம். அது சில நேரம் விபச்சாரத்திற்குறி ஒரு வழியாக அமையலாம். மேலும் அது அல்லாஹ்விடம் ஒரு பெரிய பாவமாக இருக்கலாம்.

எல்லா கண்களும் விபச்சாரம் செய்யக்கூடிய கண்களே!

விபச்சாரத்தின் ஆரம்பப் படி; பார்வை ஆகும். அன்னிய பெண்களை திரும்பத்திரும்ப் பார்பப்பது ஸினா-விபச்சாரமாகும்.

அபூ ஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகன் மீது விபசாரத்தின் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும்; நாவின் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்; (இன்னும் ஒரு அறிவிப்பில்; காதுகளின் விபச்சாரம் செவிமடுப்பதாகும்; கைகளின் விபச்சாரம் தொட்டுப் பேசுவதாகும்; கால்களின் விபச்சாரம் அவ்வாறான இடங்களுக்குச் செல்வதாகும். – முஸ்லிம்) உள்ளம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. (புஹாரி)

உஸாமா இப்னு ஸைத் رضي الله عنه அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்’: ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் வேறு எந்தச் சோதனையை (பித்னாவை)யும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை. (புஹரி, முஸ்லிம்)

அபூசயீத் அல்குத்ரீ رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது. (முஸ்லிம்)

இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் உரையைச் செவிமடுத்து; ஆண் பெண் கலப்பினால் ஏற்படும் பாரதூமான தீய விளைவுகள் என்ன என்பதை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! கற்றவைகளைக் கொண்டு அமல் செய்வோம்! அதனை எத்திவைப்போம்!

உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நாவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

ஆண் பெண் கலப்பும் அதனால் தோன்றிய விபரீதங்களும்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)