குர்ஆன் தப்ஸீர் – ஸூரா அல்-முஃமினூன் 01 – 03

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

தப்ஸீர் நூல்: தைஸீர் அல் கரீம் அர் ரஹ்மான் பீ தப்ஸீரி கலாமில் மன்னான்.

ஆசிரியர்: இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸிஃதீ ரஹிமஹுல்லாஹ்

ஸூரா:  அல்-முஃமினூன் (விசுவாசிகள்)

விளக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 01 – வசனங்கள் 01 – 07

பாடம்: 02 வசனம் 08 – 11

பாடம்: 03 வசனம் 12 – 14

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

  1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏

2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏

3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏

4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏

5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களை (விபச்சாரத்திலிருந்து) காத்துக் கொள்வார்கள்.

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ

6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ‏

7. ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

பாடம்: 02 வசனம் 08 – 11

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏

08. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய அமானிதங்களையும், தங்களுடைய வாக்குறுதியையும் (பேணிக்) காப்பாற்றுகிறவர்கள்.

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏

9. மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏

10. இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

11. இவர்கள் எத்தகையோரென்றால் ‘ஃபிர்தௌஸ்’ (என்னும் சுவனபதியை) அனந்தரமாகக் கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.

பாடம்: 03 வசனம் 12 – 14

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏

12. நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.

ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏

13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ

14. பின்னர், அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர், நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம், ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும்பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் மூன்று பாடங்களையும் செவிமடுத்து 14ன்கு வசனங்களின் விளக்கங்களையும் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)