பயன் தரக்கூடிய அறிவைத் தேடுவதிலும் ஸாலிஹான அமலைச் செய்வதிலும்தான் வெற்றியும் உயர்வும் இருக்கின்றது

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அறிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே!

முஆத் இப்னு ஜபல் رضي اللّه عنـه அவர்களின் மரணத்தருவாயில்; சில சஹாபாக்களும் தபியீன்களும் தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்கள்; நீங்கள் அனைவரும் உட்காருங்கள் என்று கூறினார்; பின்பு மாணவர்களான தாபியீன்களுக்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்:

நிச்சயமாக அறிவும் ஈமானும் அதன் இடங்களில் உறுதியாக இருக்கிறது. யாரெல்லாம் அதை தேடிச் செல்கிறார்களோ அதை அவர்கள் அடைந்து கொள்வார்கள்.” என்று மூன்று முறை கூறிவிட்டு;

உவைமிர் அபூ-தர்தா, ஸல்மான் அல்-பாரிஸி, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், மேலும் யூதராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் رضي الله عنهم போன்ற நான்கு ஸஹாபாக்களின் உலமாக்களைக் கூறி அவர்களிடம் சென்று நீங்கள் அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். (திர்மிதி: 3804, அஹ்மத்: 22104)

அவருடைய மாணவர்களுக்கு, அறிவை தேடிச் செல்வதின் அத்தியவசியத்தையும், யாரிடம் இருந்து இந்த அறிவை எடுக்க வேண்டும் என்ற வரையரையையும் உபதேசமாகச் செய்தார்கள். எனவே பயன் தரக்கூடிய அறிவைத் தேடுவதிலும் ஸாலிஹான அமலைச் செய்வதிலும்தான் வெற்றியும் உயர்வும் இருக்கின்றது.

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், இணை வைத்துக்கொண்டிருப்போர் (அதனை) வெறுத்தபோதிலும், (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்யவே (அவ்வாறு செய்தான்.)” (ஸூரதுத் தவ்பா: 33)

மேலும் யாரெல்லாம் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் முறனாக நடக்கின்றாரோ நிச்சயமாக அவரை அல்லாஹுத்தஆலா இழிவு படுத்துவான்.

மேலான அல்லாஹுத்தஆலாவின் இன்னும் ஒரு கூற்று இவ்வாறு பேசுகின்றது: “நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (அவர்களின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதன் மூலம்) விரோதிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களே இழிவுகுள்ளானவர்களில் இருப்பர்.” (ஸூரதுல் முஜாதலா: 20)

மேலான அல்லாஹுத்தஆலாவின் இன்னும் ஒரு கூற்று இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது: “நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவாக்கப் பட்டது போன்றே அவர்கள் இழிவாக்கப்படுவார்கள்,” (ஸூரதுல் முஜாதலா: 05)

இப்னு உமர் رضي اللّه عنـه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ” யாரெல்லாம் என்னுடைய ஏவல்களுக்கு முறணாக நடக்கின்றாரோ! அவர்மீது இழிவு உண்டாக்கப்பட்டுள்ளது.” (புஹாரி)

எனவே பயன் தரக்கூடிய அறிவைத் தேடுவதிலும் ஸாலிஹான அமலைச் செய்வதிலும்தான் வெற்றியும் உயர்வும் இருக்கின்றது. அதனை எங்களின் உலக தேவைகளுக்காக புறக்கனித்தால் நிச்சயமாக இழிவுதான் இருக்கும்.

ஆகையால், இந்த பயன் தரக்கூடிய அறிவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேடிச் சென்று கற்பது எங்கள் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

தினமும் நாம் உண்பதற்கும், உறங்குவதற்கும், இந்த உலகத்தைத் தேடுவதற்கும் இன்னும் இது போன்ற எல்லா காரியங்களுக்கும் நேரங்களை ஒதுக்குகின்றோம். எங்களுக்கு அவைகளைச் செய்வதற்கு நேரங்கள் ஒரு பொருட்டே அல்ல! அவன் எங்களுக்கு உணவளித்து, நிம்மதியான உறக்கத்தை தந்து, இந்த உலகத்தைத் தேடுவதற்கான ஆற்றலையும் சக்தியையும் இன்னும் இது போன்ற பல நிஃமாக்களையும் தந்துள்ளான்.

ஆனால், நாம் எம்முடைய றப்பை, ரஸூலை, மார்க்கத்தை பற்றிய அறிவை தேடிக் கற்றுக் கொள்வதற்கு ஒரு நாளில் ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். மிகவுமே நன்றி கெட்டவர்களாக இருக்கின்றோம்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள். ஏனெனில், மனிதன் ஒரு நாளில் உணவு மற்றும் குடிபானம் போன்றவற்றில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் தேவையுடையவனாக இருக்கின்றான். மாற்றமாக, அவன் அறிவின்பால் ஒரு நாளில் விடும் மூச்சுக்களின் அளவு தேவையுடையவனாக இருக்கின்றான்”. (அல்-ஆதாபுஷ் ஷரீஅஃ – பாகம்:2 பக்கம்:46)

எனவே, இன்ஷா அல்லாஹ்! உண்மையான உலமாக்களின் அறிவு மஜ்லிஸுகளைத் தேடிச் செல்வோம்! அவர்களிடமிருந்து பயன்தரக்கூடிய அறிவை பெற்று ஸாலிஹான அமல்களை செய்வோம்!

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அவர்களின் இல்ம் – அறிவு என்ற சொற்பொழிவிலிருந்து.. தொகுக்கபட்ட சில பகுதிகள்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

தொகுப்பு: அபூ அப்ஸர்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)