ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 1

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-ஃபவாகிஹ் அல்-ஜனிய்யஹ் மினல் ஆதாரிஸ் ஸலப்பிய்யஹ் (ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள்)

ஆசிரியர்: அஷ்ஷைக் அபூ இப்றாஹீம் முஹம்மத் அல்-மானிஃ அல்-உன்ஸீ ஹபிழஹுல்லாஹ்

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அடிச் சுவடுகளை (ஆதார்களை) நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?

ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் முதலாவது சமூகத்தினர். அல்-குர்ஆன் இறங்கும் போதும்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்றாட செயற்பாடுகளின் போதும் ஒன்றாக இருந்தவர்கள் ஸஹாபாக்கள் ஆவார்கள்.

அல்லாஹ்வின் பேச்சான அல்-குர்ஆனை பற்றியும்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும் மிகவும் அறிந்தவர்கள் ஸகாபாக்கள் ஆவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.

ஆகவே! சத்தியத்திற்கும் ஆதாரங்களுக்கும் மிகவும் நெறுக்கமான மேலும் அதனுடன் பின்னிப்பிணைந்த அடிச்-சுவடுகளுக்கு (கூற்றுக்களுக்கு) சொந்தக்காரர்கள் ஸஹாபாக்கள் ஆவார்கள்.

மேலும் பித்அத்துக்களை விட்டும் மிகவும் தூரமானவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் ஆவார்கள்.

பித்அத்வாதிகளை தோழுரித்துக் காட்டியவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் ஆவார்கள்.

அடிச் சுவடுகளில் (கூற்றுக்களில்) மிகச் சிறந்த அடிச்சுவடு (கூற்று) ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அடிச் சுவடு (கூற்று) ஆகும்.

✽✽ அல்-இல்ம் (அறிவு) ✽✽

சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் முன்னர் அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். (இமாம் புஹாரி)

பிரயோசனமான அறிவு; அமல் (செயல்) இன்றி இருக்காது. அதே போன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அமல் (செயல்); அறிவின்றி இருக்காது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாகவே இருக்கும்.

❖ எந்த அறிவை முற்படுத்த வேண்டும்?

இங்கு பதிவிடப்படும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அடிச்-சுவடுகள் பற்றிய பாடங்களை; இன்ஷா-அல்லாஹ்! ஆதாரங்களுடன் செவிமடுத்துக் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)