بسم اللــــه الرحمـــــــــن الرحيم
முதல் பதிப்பின் முன்னுரை
:الحمد لله حمدًا كثيرًا طيباً مباركاً فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد
:فإن الاهتمام بــــ
تعليم الصغار
،وتفقيههم في دين الله مطلب عظيم
حث عليه كتاب ربنا وسنة نبينا محمد ﷺ
நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.
இதை எமது ரப்புடைய புத்தகமும் மேலும் எமது நபி முஹம்மது ﷺ அவர்களுடைய ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.
.فقد صحَّ عند الترمذي عن ابن عباس رضي الله عنهما أن النبي ﷺ قال له: ((يَا غُلَامُ، إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ..)) الحديث
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கக் கூடிய, திர்மிதியில் இடம் பெறும் ஸஹீஹான ஹதீஸ்:
நபி ﷺ அவர்கள் அவருக்கு கூறினார்கள்: ((சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன்…))
.وصحَّ عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله ﷺ قال: ((علِّموا صِبْياَنَكُم الصَّلاةَ فِي سَبْعِ سِنِينَ..)) الحديث
மேலும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்:
ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள் கூறினார்கள்: ((“உங்களுடைய குழந்தைகள் ஏழு வயதாக இருக்கும் போது அவர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள்…))
وإن التعليم على طريقة السؤال والجواب لهي: طَرِيْقَةٌ نَبَوِيَّةٌ مُفِيْدَةٌ،
நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.
وقد قال النبي ﷺ لمعاذ رضي الله عنه: ((يَا مُعَاذُ، أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ ؟ وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ؟))
நபி ﷺ அவர்கள் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு சமயம் கேட்டார்கள்: ((அல்லாஹ்வின் மீதுள்ள அடியார்களுடைய கடமை என்ன? மேலும் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய கடமை என்ன?))
நூல்: புகாரி 6267
وقال ﷺ في حديث آخر: ((إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، فَأَخْبِرُونِي مَا هِيَ؟))
மேலும் இன்னுமொறு ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கேட்டார்கள்: ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’
நூல்: புகாரி 61
:وهذه الطريقة
.أقرب إلى الفهم والتفهيم
.وأوضح في التعلم والتعليم
இந்த கேள்வி பதில் முறை என்பது;
ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், விளக்குவதற்கும் மிக நெருக்கமான ஒரு முறையாகும்.
மேலும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும், கற்பிப்பதற்கும் மிக தெளிவான முறையாகும்.
:ومن هنا، فهذه مجموعة أسئلة يزيد عددها على الألف سؤال. كتبتها بطريقة مختصرة
احتوت على أهم المهمات من أمور الدين، وأصول الإيمان، ومبادئ الفقه, والآداب، والمعاملات، والسيرة، وغيرها. تدعوا الحاجة والضرورة إلى معرفتها، خصصتها للصغار ولا يستغني عنها الكبار
எனவே இந்த அடிப்படையில்;
இது (1000) ஆயிரம் கேள்விகளுக்கும் மேற்பட்ட கேள்விகளை கொண்ட ஒரு தொகுப்பாகும். அதை நான் சுருக்கமான முறையில் தொகுத்துள்ளேன்.
மார்கத்தில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள், ஈமானுடைய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஃபிக்ஹுடைய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஒழுக்க விழும்மியங்கள், பழக்கவழக்கங்கள், நன்னடத்தைகள், மற்றும் வரலாறுகள், மேலும் இவை அல்லாத கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தேவையான பல விஷயங்கள் இந்த தொகுப்பில் உள்ளடங்கியுள்ளது.
இந்த தொகுப்பை குறிப்பாக சிறுபிள்ளைகளுக்கு நான் ஆக்கியுள்ளேன். ஆனால் பெரியவர்களுக்கும் இதன் பால் தேவை இல்லாமல் இல்லை.
وقد تحريت جهدي أن تكون جميع الأسئلة مبنية على أدلة صحيحة من الكتاب والسنة
அனைத்து கேள்விகளும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து எடுக்கப்பட்ட சரியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன்.
:لكني لم أذكر الأدلة
இருப்பினும் நான் ஆதாரங்களை குறிப்பிடவில்லை.
أولا : لطلب الاختصار
முதலாவதாக: சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்
.ثانيا: لأن هذا سيكون إن شاء الله في كتاب آخر يكون بمثابة الشرح والتوسع في هذه الأسئلة
இரண்டாவதாக: அல்லாஹ் நாடினால் இந்த கேள்விகளின் தொகுப்பு விளக்கமாகவும் விரிவாக்கமாகவும் வேறு ஒரு புத்தகத்தில் ஆக்கப்படும்.
ثالثا: يكون هذا القدر من الجواب هو المطلوب من الصغير أن يحفظه، ويقوم المدرس بشرح الجواب، وذكر الدليل على ذلك
மூன்றாவதாக: இந்த அளவு பதிலையே குளந்தை மனனம் செய்ய வேண்டும், மேலும் ஆசிரியர் அந்த பதிலை விளக்கப்படுத்துவதுடன் அதற்குரிய ஆதாரத்தையும் மேற்கோள்காட்ட வேண்டும்
نسأل الله أن ينفع بها أبناء المسلمين، وأن يجعلها من خير ما يدخر لنا عند رب العالمين، ونسأل الله أن يجزي خيراً من قام بمراجعتها أو أعان على طبعها، والله الموفق والهادي إلى سواء السبيل
முஸ்லிம்களுடைய பிள்ளைகளுக்கு பிரயோசனமானதாக இதை ஆக்க வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம், மேலும் அகிலத்தாரின் இறைவனிடம் எங்களுக்காக வேண்டி அவன் சேமித்து வைத்திருக்கக் கூடிய சிறந்தவைகளில் ஒன்றாக அதை ஆக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம், மேலும் அதை மதிப்பாய்வு செய்தவர்கள் அல்லது அதை அச்சிட உதவியவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கவேண்டும் என்று நாம் கேட்கிறோம், மேலும் அல்லாஹ்வே வெற்றியின்பால் வழிவகுப்பவனாகவும், நேரான பாதையின் பால் செலுத்தக்கூடியவனும் ஆவான்.
:كتبه
الدكتور فيصل بن مسفر بن معوض الزنامي الوادعي
எழுதியவர்:
பைஸல் இப்னு மிஸ்ஃபிர் இப்னி மஅவ்லி அஸ்-ஸினாமீ அல்-வாதிஈ.
தமிழில்:
ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
ஹிஜ்ரி 1447 ரபீஃஉல் அவ்வல் 15
2025/09/8.
Telegram channel:
https://t.me/kanzulatfaltamil
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Vb6Zw4JGk1Fp8D0LMy1n
Facebook:
https://www.facebook.com/share/19mJ8aZpMq/
Instagram:
https://www.instagram.com/kanzulatfal?igsh=MTR0cHJxYno1aHR0dA==
X:
https://x.com/KanzulT62642?t=Y8BD7kTEIb3uQ9WU1J44oQ&s=08
YouTube:
https://youtube.com/@kanzulatfaltamil?si=2SBmBm-zRlsfU5mu
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.