
நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்
எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.
எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.
இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.
எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ! அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.
தஃவா – அழைப்புப் பணியின் அடிப்படைகளில்; ஞானமும் நளினமும் பொறுமையும் இன்றியமையாதது (அத்தியாவசியமானது) ஆகும்.
முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.
ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!
செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.
பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.
அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; அவனுடைய உரிமைக்குப் பிறகு பெற்றோரின் உரிமையைப் பற்றி அல்-குர்ஆனில் பேசுகிறான். பெற்றோருக்கு நலவு செய்யுமாறு நமக்கு கட்டளை இடுகிறான்.
நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)