Book Eplanation-தஃலீமுஸ் ஸிப்யான் அத்-தவ்ஹீத்

Facebook
Twitter
Telegram
WhatsApp

நூல்;          தஃலீமுஸ் ஸிப்யான் அத்-தவ்ஹீத் – (சிறுவர்களுக்கு ஏகத்துவத்தை கற்பித்தல்)

சிறுவர்களை இஸ்லாத்தின் இயற்கையின் மீதும், பூரண முஸ்லிமாகவும், உயர்ந்த ஈமானுடனும், உண்மையான ஒரு ஏகத்துவ வாதியாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு; பெற்றோர்கள் முதல் அவனுக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் சாரும்.

எனவே சிறுவர்கள் அல்-குர்ஆனை கற்றுக் கொள்வதற்கு முன் அகீதா சார்ந்த சில விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு சிறுவர்கள் ஆரம்பமாக கற்றுக் கொள்வதற்கு “தஃலீமுஸ் ஸிப்யான் அத்-தவ்ஹீத்” என்ற புத்தகம் மிகவும் பிரயோசனமானதாகும்.

ஆசிரியர்:  இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

இமாமவர்கள் இப்புத்தகத்தை சிறுவர்களை இஸ்லாத்தின் இயற்கையிலும், உயர்ந்த ஈமானிலும், ஏகத்துவத்திலும் பூரணமான ஒரு முஸ்லிமாக வளர்த்தெடுப்பதற்காக  தொகுத்தார்கள்.

இமாம் அவர்கள் இங்கு பேசியுள்ள அனைத்து விடயங்களையும் கேள்வி பதில் அடிப்படையிலேயே அமைத்துள்ளார்கள்.

விரிவுரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி.

பாகம்:        13 பாடங்கள் இதுவரை முடிவடைந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் தினமும் நடைபெறும் பாடங்கள் பதிவேற்றப்படும்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)