بسم الله الرحمن الرحيم
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்; நான் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்’ என்று தெரிவித்தார்கள். மேலும், ‘கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நூல்: அத்தஹ்ஸினாத் அஷ்ஷரஇய்யாஹ் மின் பைரூஸி கூரூனா வசாஇருள் அவ்பியஹ் (கொரோனா [Covid-19] வைரஸ் மற்றும் அனைத்து விதமான தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாப்புப் பெற மார்க்கம் வழிகாட்டும் அரண்கள்.)
ஆசிரியர்: அபீ அப்திர்-ரஹ்மான் அப்தில்லாஅஹ் இப்னு அஹ்மத் அல்-இர்யானி ஹபிழஹுல்லாஹ்
தமிழ் மொழி மூலம் விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி
பாகம்: 03 பாடங்கள் இதுவரை முடிவடைந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் தினமும் நடைபெறும் பாடங்கள் பதிவேற்றப்படும்
இன்ஷா அல்லாஹ் பாடத்தில் தொடர்ந்தேர்ச்சையாக பங்கெடுப்போம்! பயன் பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.