بسم الله الرحمن الرحيم
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (ஸூரத்துல் பகரா: 183)
இமாமவர்கள் நோன்பு பற்றிய இந்த சிறிய தொகுப்பில்; ரமழான் மாதத்தின் சட்டதிட்டங்கள், ரமழான் மாத தனித்துவத்தின் சிறப்புக்கள், நோன்பு நோற்பதின் சிறப்புக்கள், அதன் ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல விடயங்களைப் பேசி இருக்கின்றார்கள்.
நூல்: மஜாலிஸுர்-ரமழான் (ரமழான் மாத அமர்வுகள் – நோன்பின் சட்டதிட்டங்களும் பிரயோசனங்களும்)
ஆசிரியர்: அபீ அப்திர்-ரஹ்மான் அப்தில்லாஅஹ் இப்னு அஹ்மத் அல்-இர்யானி ஹபிழஹுல்லாஹ்
தமிழ் மொழி மூலம் விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி
பாகம்: 03 பாடங்கள் இதுவரை முடிவடைந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் தினமும் நடைபெறும் பாடங்கள் பதிவேற்றப்படும்
இமாம் அவர்கள் கீழ்க்காணும் தலைப்புக்களில் இச்சிறு நூலை தொகுத்துள்ளார்கள்.
1. ரமழான் மாதத்தின் தனித்துவங்கள்.
2. நோன்பு நோற்பதின் சிறப்புக்கள்.
3. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பவர்களின் பிரிவுகள்.
4. நான்கு நற்கட்டளைகளும் விழிப்பூட்டல்களும்.
5. நோன்பின் விரும்பத்தக்க விடயங்கள்.
6. நோன்பை முறிக்கும் காரியங்கள்.
7. எந்தக் காரணமும் இன்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுவது எச்சரிக்கப்பட்ட ஒரு விடயம்.
8. அதிகமான நோன்பாளிகளின் நோன்பு வெறும் பசித்திரித்தலும் தாகித்திருத்தலுமாகும்.
9. சங்கைமிக்க நோன்பாளியே!
10. நோன்போடு சம்பந்தமான பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்டுள்ள விடயங்கள்.
11. இரவு நேரத் தொழுகையின் சிறப்புக்கள்.
12. அல்-குர்ஆன் ஓதுவதின் சிறப்புக்கள்.
13. நோன்புப் பெருளின் சட்ட திட்டங்கள்.
14. நோன்பு சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கேள்விகளும் பதில்களும்.
15. இஃதிகாப் பற்றிய முப்பதுக்கும் அதிகமான சட்டதிட்டங்கள்.
16. ஸகாதுல் பித்ர் பற்றிய ஐம்பது கேள்வி பதில்கள்
17. பெண்களின் கேள்விகளும் பதில்களும்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.