Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.( பாடம் – 05 – 13. தொடரும்..)

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ﺍﻷﺻﻮﻝ ﺍﻟﺜﻼﺛﺔ

நூல்: அல்உஸுலுஸ்ஸலாஸா

ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விரிவுரை: அபூ அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பாரிஸ்)

பாடங்கள்: 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13

فَإِذَا قِيلَ لَكَ: مَا الأُصُولُ الثَّلَاثَةُ التِّي يَجِبُ عَلَى الإِنسَانِ مَعرِفَتُهَا؟

ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மூன்று அடிப்படைகள் என்ன? என்று உன்னித்தில் கேட்கப்பட்டால்;

فَقُل: مَعرِفَةُ العَبدِ رَبَّهُ، وَدِينَهُ، وَنَبِيَّهُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ

அடியான் தனது (றப்பை) இறைவனைப் பற்றி அறிந்துகொள்வதும், அவனுடைய மார்க்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதும், அவனுடைய நபி முஹம்மத் ﷺ அவர்களைப் பற்றி அறிந்துகொள்வதுமாகும் என்று நீ கூறு.

இமாம் அவர்கள் இந்த மூன்று அடிப்படைகளையும் கேள்வி பதில் மூலமாக விளங்கப்படுத்தியுள்ளார்கள்.

கேள்வி பதில் முறையில் கற்பிப்பது நபி ﷺ அவர்களின் ஒரு மேலான அழகான வழிமுறையாகும்.

இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இம்மூன்று விடயங்களையும் குறிப்பாக ஒரு புத்தகத்தில் ஏன் தொகுத்தார்கள்?

  1. ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
  2. இம்மூன்று விடயங்களும் கப்ரில் கேட்கப்படும் கேள்விகளாகும். (இந்த மூன்று கேள்விகளும் பித்னதுல் கப்ர் என்று அழைக்கப்படும்.)

அல்ஹம்துலில்லாஹ்! இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகத்தின் விளக்கவுரை வாரத்தில் மூன்று நாட்கள் நடை பெறுகின்றன.

இன்-ஷா அல்லாஹ்! பிரதி வாரங்களில் முடிவடைகின்ற பாடங்களின் ஒலிப்பதிவு (Audios)களை இந்த பதிவின் கீழ் தொடர்ந்தேர்ச்சையாக செவிமடுக்க முடியும்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)