
ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்
ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.
ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.
அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.
துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.
இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (ஸூரத்துல் மாயிதா: 3)
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக இந்த (தீன்) மார்க்க அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்க அறிவை யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் முகவுரை)
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! (ஸூரத்துந் நஹ்ல்: 125)
நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)