
திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள். (ஸூரத்துல் பகரா: 152)
நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)