
இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 01/37
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.
நான் சங்கைமிக்க அல்லாஹ்விடம் கேட்கின்றேன்! அவன் மிக மகத்தான அர்ஷ்ஷின் – சிம்மாசனத்தின் சொந்தக்காரன்; அல்லாஹ் இந்த உலகத்திலும், மறுமையிலும் பாதுகாக்கக்கூடிய அடியார்களில் ஒருவனாக உன்னை ஆக்கட்டும்.
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.
அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான் முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள்.
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.
லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அதிகமான உலமாக்கள்; அது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய கவிதைத் தொகுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து வைத்து சத்தியத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்த கூடியதாக இருக்கிறது.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)