بسم الله الرحمان الرحيم
ஹதீஸ் விளக்கம்:
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَقُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ “” يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ “”. قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” قُلْتُ وَعَلَيْكُمْ “”.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;
யூதர்களில் ஒரு குழுவினர் நபி ﷺ அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு “அஸ்ஸாமு அலைக்க“ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா“ அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்“ என்று கூறினார்கள். நான் “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?“ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “நானே “வ அலைக்கும்“ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி)
قَالَ “” مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ “”. قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ “”.
‘ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
இன்-ஷா அல்லாஹ்! இந்த ஹதீஸின் தெளிவுரையை செவிமடுத்து, நளினம் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! நற் செயல்களின் பால் முந்திக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.