بسم الله الرحمن الرحيم
அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: ஷெய்க் அவர்களே! ஒரு மனிதர் இமாம் ஜமாஅத்துடன் தொழுகின்றார்; அப்போது நான்கு ரக்‘அஃ,களை தொழுவித்துக் கொண்டிருந்த இமாமவர்கள்; அவருக்கு ஏற்பட்ட மறதியினால், நான்கு ரக்‘அஃ,கள் தொழுதுவிட்டு ஐந்தாவது ரக்‘அஃ,வுக்காக எழுகின்றார்.
அப்போது பின்னால் தொழுதுகொண்டிருந்த மனிதர் இமாம் அவர்களுக்கு சுப்ஹானல்லாஹ் என்று கூறி விழிப்பூட்டுகின்றார். எனினும் இம்மனிதரின் விழிப்பூட்டலை இமாம் அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில் ஐந்தாவது ரக்‘அஃ, வையும் பூரணப்படுத்துகின்றார்.
எனவே இவ்வாறு தொழுகையில் இமாமுக்கு தவறுதலோ அல்லது மறதியோ ஏற்பட்டால்; மஃமூம் (இமாமுக்கு பின்னால் தொழுகிறவர்)கள் என்ன செய்ய வேண்டும்?
ஷெய்க் அவர்களின் பதில் தமிழ் மொழி மூலம்:
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.
ஒரு இமாம் கூடுதலான; (ஐந்தாவது) ரக்’அஃவுக்காக எழுந்து நின்றதை இமாமின் பின்னால் தொழுகின்ற நபர்கள், உணர்ந்தால்; மஃமூம்களுக்கு இருக்கின்ற கடமை:
“இமாமை பின் துயரக் கூடாது”. மாறாக அவர் நான்காவது ரக்’அஃவின் தஷஹ்ஹுதி (அமர்வி)ல் உட்கார்ந்து காத்திருக்க வேண்டும்; மேலும் இமாமை விட்டு அவர் பிரியக் கூடாது.
பிரகு இமாம் ஐந்தாவது ரக்’அஃத்தின் தஷஹ்ஹுதி (அமர்வி)ற்கு வந்ததன் பின்னர் இமாம் ஸலாம் கொடுக்கும் போது அவருடன் இணைந்து நாமும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர், இமாம் அவர்கள் கூடுதலாக ஒரு ரக்’அஃ தொழுததை அவருக்கு நாம் உணர்த்தி ஸஜ்தா ஸஹ்வ் செய்ய ஏவ வேண்டும்.
பின்னர் இமாம் அவர்கள் ஸுஜூத் செய்வார்கள்; அவருடன் இணைந்து நாமும் ஸுஜூத் செய்ய வேண்டும்.
இதுவே மஃமூம்களுக்கு இருக்கின்ற கடமையாகும்.
தமிழ் தொகுப்பு: அபூ அப்ஸர்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.