بسم الله الرحمن الرحيم
அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி:
ஷெய்க் அவர்களே!
பள்ளிவாசலுக்குச் செல்லும்போது; ஓதுவதற்கு என்று ஏதாவது ஆதாரபூர்வமான துஆக்கள் ஹதீஸ்களில் வந்துள்ளதா?
ஷெய்க் அவர்களின் பதில் தமிழ் மொழி மூலம்:
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.
பள்ளிவாசலுக்குச் செல்லும்போது ஓதுவதற்கு என்று ஒரு துஆ; இமாம் அல் புஹாரி, மற்றும் இமாம் முஸ்லிம் ரஹிமஹுமல்லாஹ் அவர்களின் ஸஹீஹான புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் رضي اللّٰه عنهما அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள்; தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) (சுப்ஹுத் தொழுகைக்காக) அதான் சொன்னதும்; பஜ்ர் (சுப்ஹ்) தொழுகையின் முன் இரண்டு ரக்அத்துக்களை வீட்டில் தொழுதுவிட்டு (வீட்டிலிருந்து) பின்வரும் துஆவைக் கூறிக் கொண்டே புறப்பட்டுச் சென்றார்கள்.
اللَّهُمَّ اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا ، وَاجْعَلْ لِي فِي سَمْعِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي لِسَانِي نُورًا ، وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا ، وَمِنْ أَمَامِي نُورًا ، وَمِنْ خَلْفِي نُورًا ، وَمِنْ تَحْتِي نُورًا ، وَمِنْ فَوْقِي نُورًا ، اَلَّلهُمَّ عَظِّمْ لِي نُورًا
{{அப்போது ”அல்லாஹும்மஜ்அல்லீ ஃபீ கல்பீ நூரா. வஜ்அல்லீ ஃபீ ஸம்ஈ நூரா. வஃபீ பஸரீ நூரா. வஃபீ லிசானீ நூரா. வஅன் யமீனி நூரா. வஅன் ஷிமாலி நூரா. வமின் அமாமீ நூரா. வமின் கல்ஃபீ நூரா. வமின் தஹ்த்தீ நூரா. வமின் ஃபவ்க்கீ நூரா. அல்லாஹும்ம அஃள்ளிம்லீ நூரா.}}
பொருள்: யா அல்லாஹ் ! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.என் வலப்பக்கத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. யா அல்லாஹ் ! எனக்கு ஒளியை வழங்குவாயாக.
ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த துஆவை நபி ﷺ அவர்கள் ஏனைய தொழுகைகளுக்காக செல்லும்போது ஓதவில்லை.
மாற்றமாக அவர்கள் பஜ்ர் (சுப்ஹ்) தொழுகைக்காக செல்லும்போது மாத்திரமே ஓதி இருக்கின்றார்கள்; என்றே இடம் பெற்றுள்ளது.
எனவே நாமும் பஜ்ர் தொழுகைக்காக வீட்டிலிருந்து வெளியேறும்போதே இந்த துஆவை ஓதக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் தொழுகைக்காக வீட்டிலிருந்து வெளியேறும்போது ஓதுவதற்கு; மேற்குறிப்பிடப்பட்ட துஆ அல்லாமல் வேறு எந்த ஒரு துஆவும் இடம் பெறவில்லை.
எனவே நாம் அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவில் இருப்பவைகளைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள வேண்டும்.
தொகுப்பு: அபூ அப்ஸர்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.