அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 22

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 22

106 – اَلْجَمِيْلُ – மிக அழகானவன்

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ ، عَنْ النَّبِيِّ ﷺ قاَلَ : ⸨إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ⸩ ، أخرجه مسلم (۹۱)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رضى الله عنه அவர்கள் கூறியதாவது: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: [[அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான்.]] (முஸ்லிம்: 91)

107 – اَلْمَنَّانُ – பெருமைப்படத்தக்க வகையில் வாரி வழங்குபவன்

عَنْ أَنَسِ بْنِ مَالِكِ قَالَ : سَمِعَ النَّبِيُّ ﷺ رَجُلاً يَقُولُ : اَلَّلهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ ، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ ، الْمَنَّانُ … فَقَالَ : لَقَدْ سَأَلَ اللهَ بِاسْمِهِ الْأَعْظَمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَي وَإِذَا دُعِيَ بِهِ  أَجَابَ⸩ ، أخرجه ابن ماجه (۳٨۵٨) وهو حديث حسن

அனஸ் இப்னு மாலிக் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அல்லாஹும்ம இன்னீ அஸ்-அலுக பி-அன்ன லகல் ஹம்த , லாயிலாஹ இல்லா அந்த வஹ்தக லா ஷாரீக லக , அல்-மன்னானு…) என்று ஒரு மனிதர் கூறுவதை நபி ﷺ அவர்கள் செவியுற்றார்கள்; அப்போது நபியவர்கள்: [[திட்டமாக இவர் அல்லாஹ்வை அவனது மிக மகத்தான பெயரைக் கொண்டு அழைத்துவிட்டார்; அது எத்தகையது என்றால், அதைக் கொண்டு அவன் கேட்கப்பட்டால் கொடுத்துவிடுவான்; மேலும் அதைக் கொண்டு அவன் அழைக்கப்பட்டால், விடை அளிப்பான்.]] (இப்னு மாஜா: 3706 – இது ஒரு ஹஸனான ஹதீஸ் ஆகும்.)

108 – اَلسَّيِّدُ – தலைவன்

عَنْ عَبْدِ اللهِ بْنِ الشِخِّيرِ قاَلَ : قُلْنَا يَا رَسُولِ اللهِ أَنْتَ سَيْدُنَا ، فَقَالَ : ((السَّيْدُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى)) ، أخرجه أبوداود (٤٨٠٦ ) وهو حديث صحيح

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸிஹ்ஹீர் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்ரார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நீங்களே எங்களது தலைவர் என்று கூறினோம்; அப்போது நபியவர்கள்: [[அபிவிருத்தி பெற்ற, உயர்ந்தவனாகிய அல்லாஹ்வே தலைவனாவான் என்று பதில் அளித்தார்கள்.]]  (அபூதாவுத்: 4806 – இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.)

109 – اَلدَّيَّانُ – விசாரணை செய்பவன்

قاَلَ الإمام البخاري رحمه الله : ( في كتاب التوحيد ، باب ( ۳۲ ) وَيُذْكَرُ عَنْ جَابِرِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ : ((يَحْشَرُ اللهُ الْعِبَادَ فَيُنَادِيْهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مَنْ بَعْدَ كَمَا يَسْمَعُهُ مَنْ قَرُبَ أنا الْمَلِكُ أَنَا الدَّيَّانُ ….)) ، ووصله أحمد في “مسنده”   ( ۳:/٤۹۵ )، والحديث حسن ، وقد أثبت هذه الاسم ابن القيم في نونيته

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: கிதாபுத் தவ்ஹீத் பாடம்: 32; ஜாபிர் رضى الله عنه அவர்களைத் தொட்டும்; அப்துல்லாஹ் இப்னு உனைஸ் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூற நான் செவிமடுத்துள்ளேன். [[அடியார்களை அல்லாஹுத் தஆலா மறுமை நாளில் எழுப்புவான்; சமீபத்தில் இருப்பவர்கள் செவிமடுப்பதைப் போன்றே தூரத்தில் இருப்பவர்களும் செவிமடுக்கும் படி ஒரு சத்தத்தைக் கொண்டு அவர்களை அழைத்து நானே பேரரசன்; நானே விசாரணை செய்து தீர்ப்புக் கூறும் நீதியாளன் …]] என்று கூறுவான். (இதை அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவரது முஸ்னத்திலே இணைத்து அறிவித்துள்ளார்கள்: 3/495, மேலும் இது ஒரு ஹஸனான ஹதீஸ் ஆகும். மேலும் இந்த பெயரை இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூனிய்யா எனும் கவிதைத் தொகுப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

❖❖❖முற்றும்❖❖❖

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)