بسم الله الرحمن الرحيم
يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் கொண்டு மகிச்சி அடைவதுதான் ஒரு முஃமினுடைய பண்பு; அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் வெறுப்பது முனாபிக்குகளின் பண்பு ஆகும்.
ஜுமுஆ உரை:
அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
இந்த உலக அழகுகளையும், பிள்ளைகளயும், செல்வங்களையும் கொண்டு மகிழ்ச்சி அடைவது; அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டுவரும் ஒரு அம்சமாகும்.
ரமழான் மாதத்தைக் கொண்டு ஒரு முஃமின் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!“ என்று அல்லாஹ் கூறினான்.
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் “நான் நோன்பாளி!“ என்று அவர் சொல்லட்டும்!
முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.” என அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் கொண்டு மகிச்சி அடைவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.