بسم اللــــه الرحمـــــــــن الرحيم
முஆவியா رضي الله عنه இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே (இன்னும் ஒரு அறிவிப்பில் சத்தியத்தை எடுத்து நடக்கக் கூடியவர்களாக) இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள். அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்வரையில் அதே நிலையில் நீடித்திருப்பார்கள் (புஹாரி: 3641, முஸ்லிம்)
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
(விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஸூரத்துல்ஆல இம்ரான்: 104)
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰ
(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான்:110)
ஜுமுஆ உரை:
அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! மேன்மையான அந்த சமுதாயத்தினரை அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.