بسم الله الرحمن الرحيم
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا
மேலும், (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள், மேலும் (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், (உங்களில்) குறைவானவர்களைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (ஸூரத்துன்னிஸா: 83)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! சோதனைகள்-பீதிகள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.