بسم اللــــه الرحمـــــــــن الرحيم
இமாம் ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றின் விளக்கவுரை:
மார்க்க அறிவை கற்று அதனை மக்கள் மத்தியில் பரப்பினால்; அல்லாஹ் எங்களை கண்ணியப்படுத்துவான் மேலும் இந்த காபிர்களுக்கு மத்தியில் நாம் தலை நிமிர்ந்து வாழலாம். அதுவரையில் எம்மால் கண்ணியத்தையும் தலை நிமிர்ந்து வாழ்வதையும் எதிர்பார்க்க முடியாது.
இமாம் ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: முன் சென்ற எங்களுடைய உலமாக்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்: ஸுன்னாவை (நபி ﷺ அவர்களின் வழிமுறையை) பலமாக பற்றிப் பிடித்துக் கொள்வது (பித்னாக்களில் இருந்து) பாதுகாப்பாகும்; மேலும் மார்க்கக் கல்வி (மக்களுக்கு மத்தியில் இருந்து) மிக வேகமாக கைப்பற்றப்படும்; எனவே மார்க்கக் கல்வியை நிலை நாட்டுவதில்தான் (எங்களுடைய) மார்க்கத்தின் மற்றும் உலக வாழ்வின் ஸ்திரத்தன்மை உள்ளடங்கி இருக்கிறது; மேலும் எப்போது அந்த மார்க்க கல்வி (எங்களை விட்டும்) துண்டிக்கப்படுமோ! அப்போது அவ்வனைத்தும் (எங்களை விட்டுச்) சென்றுவிடும்.
விளக்க உரை: அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி
இன்ஷா அல்லாஹ் கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! மார்க்க அறிவைக் கற்போம்! அதனை பரப்புவோம்! அல்லாஹ்வின் கண்ணியத்தையும் உயர்வையும் அடைந்திடுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.