بسم اللــــه الرحمـــــــــن الرحيم
செல்வங்களும் பிள்ளைகளும் எங்களுக்கு ஒரு சோதனையாகும். இவைகள் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.
அல்லாஹ்வை அதிக அதிகமாக நினைவு கூறுங்கள்.
நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.
நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (ஸூரத்துன்னிஸா: 78)
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான்: 185)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! மரணத்தை நோக்கிய பயணத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.