Jumu’ah-ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)
நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.
நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)