
கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். …
தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)
‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி ﷺ அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ﷺ அவர்களிடம்) ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ …
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.
ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)