
திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3] எனவே அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.
எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?
துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)