Tajweed Rules -அல்-குர்ஆனிலுள்ள எழுத்துக்களை வெளியாக்கும் இடங்கள் மற்றும் பண்புகள்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمان الرحيم

பாடம்: தஜ்வீத் சட்டங்கள்-அல்-குர்ஆனிலுள்ள எழுத்துக்களை வெளியாக்கும் இடங்கள் மற்றும் பண்புகள்.

மொத்த பாடங்கள்: 79

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

தஜ்வீதின் அறிவியல்

அல்-குர்ஆனை முறைப்படி அழகுற ஓதுவதற்கு தஜ்வீதினுடைய பாடம் மிக சிறப்புவாய்ந்த ஒரு பாடமாகும். ஏனெனில் அல்-குர்ஆன் அல்லஹ்வுடைய பேச்சாகும். அந்த அல்லாஹ்வின் பேச்சை சரியாகவும், பிழையின்றியும், அழகாகவும் ஓதுவதற்கு இந்த இல்முத் தஜ்வீதை-தஜ்வீதின் அறிவியலை கற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சி மிக மகத்தானதாகும்.

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

முஸ்லிம் சமூகத்தில் இன்று எத்தனை வீதமானவர்களுக்கு அல்-குர்ஆனை ஓதத் தெரியும்? அப்படி ஓதத் தெரிந்தவர்களில் தர்தீலாக-அல்-குர்ஆனை நன்கு திருத்தமாக தஜ்வீத் சட்டங்களோடு நிறுத்தி நிறுத்தி ஓதத்தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? அப்படி ஓதத் தெரிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே!

உலக கல்விகளை அடைந்து கொள்வதற்காக எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றோம்! எமது பொருளாதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக எப்படியெல்லாம் காலங்களையும் நேரங்களையும் செலவு செய்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.. (முஸ்லிம்)

நாளைய தினத்தில் எங்களுக்காக சிபாரிசு-பரிந்துரை செய்யக்கூடிய அல்லாஹ்வின் பேச்சான இந்த அல்-குர்ஆனை (தஜ்வீத் முறைப்படி) அழகாக, திருத்தமாக நிறுத்தி நிறுத்தி ஓதுவதற்கும், அதனை விளங்கி கற்றுக் கொள்வதற்கும் ஒருநாளையில் அல்லது ஒருவாரத்தில் எவ்வளவு நேரங்களை ஒதுக்கி இருக்கின்றோம்!? அப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்க நேரங்களையும் காலங்களையும் ஒதுக்கி முயற்சி செய்கின்றவர்கள் மிக மிக குறைவானவர்களே!

மேலான அல்லாஹுத்தஆலா தனது புத்தகமான அல்-குர்ஆனில் ஏவுகின்றான்:

وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ‏

குர் ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! (ஸூரத்துல் முஸ்ஸம்மில்: 4)

அல்-குர்ஆன் அல்லாஹ்வுடைய பேச்சு ஆகும். அதனை தெளிவாக அழகிய முறையில் ஓதுவது கடமையாகும்.

أنَّ النبي ﷺ قال: ››زيِّنوا القرآنَ بأصواتكم –  ‹‹ صحيح   (الألباني) ٠ 

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்கள் குரல்களால் குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள். – ஸஹீஹ் (அல்பானி)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ ” وَزَادَ غَيْرُهُ يَجْهَرُ بِهِ

அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார்கள்;  நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் எல்லாம் அழகிய முறையில் குர்ஆனை ஓதவில்லையோ அவர் எங்களைச் சார்ந்தவர் அல்ல. (புஹாரி)

குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானது.

அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், “நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது” எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) – (ஸஹீஹுல் முஸ்னத் – இமாம் அல்-வாதியீ)

எனவேதான் உலமாக்கள் அல்-குர்ஆனை அழகிய முறையில் ஓதுவதற்காக இல்முத்-தஜ்வீத் எனும் தாஜ்வீதின் அறிவியல் துறையை தோற்றுவித்துள்ளார்கள்.

இன்-ஷா அல்லாஹ்! இந்த தஜ்வீதின் அறிவை பொறுமையுடன் ஒவ்வொரு பாடமாக தினமும் குறிப்பெடுத்து கற்போம்!

கற்ற பாடங்களை மீட்டி; அல்-குர்ஆனின் எழுத்துக்கள் வெளியாகும் சரியான இடங்களினால் அதற்கே உரிய பண்புகளைக் கொடுத்து உச்சரித்து பயிற்சி செய்வோம்!

அழகாகவும் தெளிவாகவும் தஜ்வீத் சட்டங்களைப் பேணி அல்-குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வோம்!

மேலும் எமது குடும்பங்கள், நண்பர்கள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த தஜ்வீதின் அறிவைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துவோம்! எத்திவைப்போம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)