
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 18
நிச்சயமாக கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் அதிகமாக வெட்கப்படக்கூடியவனாகவும், குறைகளை மறைப்பவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் அதிகமாக வெட்கப்படக்கூடியவனாகவும், குறைகளை மறைப்பவனாகவும் இருக்கின்றான்.
அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான் முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள்.
அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா.
இப்புத்தகத்தை தொகுத்தவர்: அஷ்ஷெய்ல் அலி அல்-ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்.
இந்த புத்தகம் சிறு பிள்ளைகளுக்கு தவ்ஹீத், பிக்ஹ், அகீதா போன்ற அடிப்படைகளை ஆரம்பமாக கற்றுக் கொடுப்பதற்காக இமாம் அவர்களால் தொகுக்கப்பட்டது.
தமிழ் மொழி மூலமாக இப்புத்தகத்திற்கான விளக்கவுரையை இலங்கையின் ஹெடன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது கண்ணியத்திற்குறிய சகோதரர் அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் மிக அழகாகவும், சிறப்பாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் செய்துள்ளார்கள். அந்த உரையின் தமிழ் தொகுப்பே இந்த ஆக்கம்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)