கொரோனா மற்றும் ஏனைய நோய்கள் மூலம் நேசத்திற்குரியவர்களை இழந்தவர்களுக்கு; ஒரு நினைவூட்டலும் அழகிய ஆறுதல் வார்த்தைகளும்.
நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.