
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?
எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.
எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?
அல்லாஹ் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3] எனவே அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.
நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.
அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)