
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 19
துந்நூரைன் – இரண்டு ஓளியை உடையவர் (உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியின் இரண்டு மகள்மார்களை திருமணம் செய்திருந்தார்கள்.)
துந்நூரைன் – இரண்டு ஓளியை உடையவர் (உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியின் இரண்டு மகள்மார்களை திருமணம் செய்திருந்தார்கள்.)
“உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில் அகத்தூண்டல் (உள்ளத்தில் உதிப்பு) மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்” என்று நபி ﷺ அவர்கள் கூறிவந்தார்கள்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசினால் அது சத்தியம் ஆகும். ஏனெனில் அவருடைய நாவையும் உள்ளத்தையும் அல்லாஹ் சத்தியத்தில் நிலை நாட்டியுள்ளான்.
அல்லாஹ்வை தவிர வேறு ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன்.
அபூபக்ரின் செல்வம் எனக்கு பலனளித்ததைப் போல் வேறு எவருடைய செல்வமும் பலனளிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
உன்னதமான ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் நீ பயணிப்பீராக! அவர்களை விரும்புவதில் உண்மையாளனாக நீ நடந்து கொள்வீராக!. அவ்வாறு அவர்களை இந்த உலகத்தில் நீ விரும்பினால்; “மறுமை நாளில் எழுப்பப்படும் போது அவர்களோடு சேர்த்து நீ எழுப்பப்படுவாய்.” ஏனென்றால் யார் ஒருவரை நேசிக்கின்றாரோ அவரோடு மறுமை நாளில் அவர் இருப்பார்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. ✽✽✽ என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்
என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
துல்குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். நான் நீதமாக நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதமாக நடந்துகொள்வார்? நபி ﷺ அவர்கள் கூறினார்கள்; அவனின் முள்ளந்தண்டிலிருந்து ஒரு சமுதாயம் தோன்றும்; வில்லிலிருந்து அம்பு பாய்ந்து செல்வதைப்போல இஸ்லாத்தை விட்டும் அவர்கள் செல்வார்கள்.