
திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
அபூ மூஸா رضى الله عنه அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: [[நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.]] (புஹாரி: 6398, முஸ்லிம்: 2719)
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். (ஸூரத்துன் நூர்: 20)
துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்” (ஸூரத்துல் மாயிதா: 117)
அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28) / அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரதுல் ஹஜ்: 78)
கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)
மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)
அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். (ஸூரதுல் புரூஜ்: 15)
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)