
பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 03
செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.
செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.
பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.
அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; அவனுடைய உரிமைக்குப் பிறகு பெற்றோரின் உரிமையைப் பற்றி அல்-குர்ஆனில் பேசுகிறான். பெற்றோருக்கு நலவு செய்யுமாறு நமக்கு கட்டளை இடுகிறான்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பதிலளிப்போம்!
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள்.
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (ஸூரத்து முஹம்மது: 07)
நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது. (ஸூரத்து ஹூது: 120)
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)