
திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!
அல்லாஹ்வின் தூதரே! நீங்களே எங்களது தலைவர் என்று கூறினோம்; அப்போது நபியவர்கள்: [[அபிவிருத்தி பெற்ற, உயர்ந்தவனாகிய அல்லாஹ்வே தலைவனாவான் என்று பதில் அளித்தார்கள்.]] (அபூதாவுத்: 4806 – இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.)
செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…)
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?
தொழுகையில் நின்று தொழுதல்: உட்கார்ந்து தொழ முடியுமா?; நோய்வாய்ப்பட்டவர் உட்கார்ந்த நிலையில் தொழுவதின் சட்டம் என்ன? கப்பலில், விமானத்தில் நின்று, உட்கார்ந்து தொழுவதின் சட்டம் என்ன? நின்ற நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றும் உட்கார்ந்தும் தொழலாமா?
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக இந்த (தீன்) மார்க்க அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்க அறிவை யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் முகவுரை)
யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.
அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)