• Home
  • பிக்ஹ்
  • நோன்பு
  • கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

கேள்வி:

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன?? அவள் அதனை பின்னொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமா? அல்லது அதனை நிறைவேற்றுவதுடன் பரிகாரமும் கொடுக்க வேண்டுமா??

பதில்:

அவள் எப்போது சக்தி பெறுகின்றாளோ! அப்போது அதனை அவள் நிறைவேற்றுவது கட்டாயக் கடமை ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ )

“ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவர் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தாரோ (அவருக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுண்டு; விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் எண்ணி(நோற்றுவி)டவு”. ( ஸுரதுல் பகரா :184)…

மேலும், அனஸ் இப்னு மாலிக் அல்-கஃபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் செய்தியில் இருந்து ஊர்ஜிதமானது தான்;

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக அல்லாஹ் பிரயாணியின் மீது தொழுகையின் அரைப் பங்கை உயர்த்தி விட்டான். இன்னும் கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி இவர்களின் மீதும் நோன்பை ( நோற்பதை) உயர்த்தி விட்டான்.”

இந்த செய்தி அபூ தாவூத், திர்மிதீ, நஷாஈ, இப்னு மாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவாகி உள்ளது.

நிச்சயமாக இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது; இவ்விரு பெண்மணியின் மீதும் முழுமையாகவே ( நோன்பு) உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் நோன்பு பிடிப்பதற்கும் தேவை இல்லை. மேலும் பின்னொரு நாளில் அதனை நிறைவேற்றுவதற்கும் தேவை இல்லை. என்று சிலர் கூறுகின்றார்கள்.

அந்த அடிப்படையில் இந்த விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களை மையமாக வைத்தும், மற்றும் அதிலிருந்து ஒரு ஆதாரம் தான் மேற்குறிப்பிட்ட ( அல் குர்ஆனிய) வசனம் ஆகும்.

இதன் மூலம் தெளிவாக அறியப் படுகிறது: நிச்சயமாக அல்லாஹ் அவளுக்கு நிறைவேற்றக் கூடிய சக்தியை இழகுவாக்கிக் கொடுக்கும் வரை; அந்த (நோன்பு) காலத்தின் போது தான் அவர்கள் மீது உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே (பின்னொரு நாளில்) நிறைவேற்றுவது மாத்திரம் தான் அவள் மீது கடமை ஆகும்.

இமாம் ஹஸன் அல்-பஸரி, இப்ராஹீம் இப்னு யஸீத் அன்-நகஈ, தாவூத் அத்-தாஹிரி, ஷித்தீக் ஹஸன் கான் மற்றும் சிலர் இந்த கூற்றுக்கு பக்க பலமாக இருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் எவரின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட ரமழான் மாத நோன்பு விடுபட்டுள்ளதோ! அவள் கட்டாயமாக பரிகாரத்துடன் நோன்பு நோற்க வேண்டும். என்பதற்கு உண்மையான தெளிவான ஆதாரம் (எங்கும்) இல்லை.

📚 [ அல்-கன்ஸ் அஷ்-ஷமீன் என்ற பத்வா தொகுப்பில் இருந்து; ஹிஜ்ரி 1422 ரஜப் 19 திகதி இந்த கேள்வி கேட்கப் பட்டது , தாருல் ஹதீஸ் தம்மாஜ்]

தமிழாக்கம்:
அபூ உஸாமா ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானீ (وفقه الله)

14/ ரமழான்/1443.
15/04/2022

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)