بسم الله الرحمن الرحيم
அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி
உண்மையாக இருப்பதன் முக்கியத்துவம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப் பட்டுவிடுவார். (புகாரி)
உண்மை என்ற விடயத்தில் எது எல்லாம் அடங்கும்?
பொய் என்ற விடயத்தில் எது எல்லாம் அடங்கும்?
உண்மையாக இருப்பதற்குறிய முக்கியமான அம்சம் எது?
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! உண்மையின்பால் விரைந்து செல்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.