
அல்லாஹ்வின் எதிரியை பயப்படுவதை விட அல்லாஹ்வைப் பயந்துகொள்!
அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:28)

நோன்பு மாதத்தை பரிபூரணமாக விசுவாசம் கொண்டு இபாதாக்களை செய்து வந்தால்; நிச்சயமாக அவர் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரில் இருந்து வரக்கூடிய ஒரு நபராக இருப்பார்.

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள். (ஸூரத்துல் ஆல இம்ரான்: 173)

இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (ஸூரத்துல் மாயிதா: 3)

அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். (ஸூரதுல் புரூஜ்: 15)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான் முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார்

அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா” என்ற இந்த நூலில் அவர் பேசியுள்ள விஷயங்கள்; முஸ்லிம் உம்மாவின் சிறியவர்கள் முதல் முடி நரைத்த முதியவர்கள் வரை அறிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடங்களாகும். இன்-ஷா அல்லாஹ்! விளக்கவுரையை செவிமடுப்போம்!